பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசியில் சில நிகழ்ச்சிகள் ${}; (3) ஒருநாள் திரு வினைதீர்த்தான் செட்டியாரவர்கள் நகரவிடுதியிலேயே நல்ல புரோகிதரைக் கொண்டு என் பெற்றோர்கட்குத் திதி (திவசம்) செய்வதற்கு ஏற்பாடு செய்தார்கள். கங்கைக்கரையில் பலர் "தி தி கொடுப்பதைப் பார்த்தேன். காசியாத்திரையாகச் செல்பவர்கள் காசியில் பெற்றோர்கட்கு தவறாது திதி (சிரார்த்தம்) கொடுப்பதை வழக்கமாகச் செய்து வருவதையொட்டி எனக்கும் என் பெற்றோர்கட்கு இவ்வாறு திதி கொடுக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது, "கங்கைக்கரையில் அவசர அவசரமாகச் செய்து விட்டு அடுத்தவர்களை எதிர் நோக்கி நிற்பார்கள்:மந்திரங்களையும் சுருக்கமாக முடித்து விடுவார்கள், நிதானமாக விடுதியிலேயே செய்து திவசம் செய்த சேஷப் பொருள்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து எடுத்துக் கங்கையில்சேர்த்து விடுவோம். சத்திரத் திலேயே சிறப்பான உணவுக்கு (வடை பாயசத்துடன்) ஏற்பாடு சேய்வேன்' என்று திரு வினை தீர்த்தான் செட்டியார் அன்புடன் கூறி அனைத்தையும் சிறப்பாகச் செய்வித்தார்கள். முன்பின் தெரியாத இடத்தில் திரு. செட்டியார் செய்த உதவி இன்றளவும் என் மனத்தில் பசுமையாகவே உள்ளது. (4) இன்னொரு நாள் பகலுணவிற்குப் பிறகு ஆள் மிதிவண்டி ஒன்றை அமர்த்திக் கொண்டு (அ) காசி இந்துப் பல்கலைக் கழகம் (ஆ) இராமமந்திர் என்ற சரிடங்கட்குப் போய் வந்தோம். காசிப் பல்கலைக் கழகம் ஒரு பெரிய வளாகத்தில் அமைக்கப் பெற்றுள்ளது: ஒவ்வொரு துறைக் கும் தனித்தனிக் கட்டடங்கள்; கட்டடங்களுக்கிடையே அதிக இடைவெளி விட்டுக் கட்டப் பெற்றுள்ளன. மரங்கள் வளர்க்கப் பெற்றுள்ளன. வளாகம் ஒரு சோலையாக மாறி உள்ளது.