பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 04 நினைவுக் குமிழிகள்-2 ஒங்குமரன் ஓங்கிமலை ஓங்கிமணல் ஓங்கிப் பூங்குலை குலாவுகுளிர் சோலைபுடை விம்மி" என்று கம்பன் காட்டும் சூழ்நிலை என் நினைவிற்கு வருகின்றது. அகத்திய முனிவர் ஆசியுடன் வில்லும் வாளும் அம்பும் பெற்றுப் பஞ்சவடியை நோக்கி வரும் இராமனுக் குப் பஞ்சவடி அமைந்துள்ள சூழ்நிலையைக் காட்டுவது இது. மேலும் நாகர்கோவிலிலிருந்து சுமார் ஐம்பது கல்: தொலைவிலுள்ள திருவனந்தபுரம் வரையிலும் இதே சூழ்நிலையைக் கண்டதும் நினைவில் எழுகின்றது; ஒரு சமயம் திருச்சி மாவட்டம் வைரி செட்டிபாளையத் திலிருந்து மூன்று கல் தொலைவிலுள்ள கொல்லி மலை அடிவாரத்தில் கண்டபுளியஞ் சோலையையும் நினைந்து பார்க்கின்றேன். வளாகத்தின் சோலைக்குள் கட்டடங்கள் இருப்பது அழகுணர்ச்சியைத் தூண்டுவதாக உள்ளது. இந்த வளாகத்திற்குள் பிர்லா மந்திர்’ என்ற ஓர் அழகான மண்டபம் உள்ளது. மாணாக்கர்கள் பயிலு: வதற்குச் சிறந்த இடமாக அமைத்த பல்கலைக் கழகம் நிறுவின பெரியார்களின் நீள் நோக்கினை நினைந்து நினைந்து மகிழ்ந்தேன். நான் மாணாக்கனாக இருந்து பயிலும் வாய்ப்பு இல்லாமல் போயிற்றே?" என்று மனங் கவன்றேன். என் மக்களையாகிலும் பயில வாய்ப்பு தந்திருக்கலாம் என்றும் சிந்தித்தேன். நாடெங்கும் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணாக்கர் களிடம் கொந்தளிப்பும் வேலை நிறுத்தமும் இருந்தமை யால், என் மக்களை என்னுடனே வைத்துக் கொண்டு உயர் கல்வி பெறுமாறு செய்ததை நினைத்துக் கொண் டேன். பல்கலைக் கழக வளாகத்தைக் கால் நடையாகவே சுற்றிப் பார்த்து மகிழ்ந்தோம். 4. கம்பரா. ஆரணி. அகத்தில்-57