பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசியில் சில நிகழ்ச்சிகள் 3.95 அடுத்து இராம மந்திர்' என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். யாரோ ஒர் அம்மையார் தம்முடைய இராம பக்திப் பெருக்கின் காரணமாக வழங்கிய பல கோடி ரூபாயைக் கொண்டு கட்டப் பெற்ற ஒர் அற்புதமான இலக்கிய மாளிகை என்பதைக் கண்டு எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தேன். மிகப் பெரிய கட்டடம். உட்புறம் பளிங்குக் கல்லால் அமைந்தது. கட்டடம் முழுதும் துளசி ராமாயணப் பாடல்கள் பொறிக்கப் பெற்றுள்ளன; ஒரு பாடல் விடாமல் பொறிக்கப் பெற்றிருப்பதாகச் சொன் னார்கள் அங்குப் பணியாற்றும் அன்பர்கள். இந்தச் சூழ் நிலையில் என் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் குமிழி யிடத் தொடங்குகின்றன. 'நமது சமய நூல்கள் அன்பைப் 'பக்தி ' என்றும், காதலைப் பிரேமம்” என்றும் பிரித்துப் பேசும். பக்தியைக் காட்டிலும் பிரேமமே சிறந்தது, இப்பிரேமம் என்னும் காதலின் இலக்கணத்தை வெளியிட எழுந்த இலக்கணங்களும் உயரியதும், தூயதுமான காதல் இவ்வுலக மக்களிடையே நிகழ்தல் அரிதாகும் என்றும், தெய்வத் தன்மை வாய்ந்த, நம்மாழ்வார்', திருமங்கை யாழ்வார், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற சீரியரிடையேதான் இஃது அரும்பா நிற்கும் என்றும் அறிஞர்கள் கூறுவர்'-இதனை என் மனம் சிந்தித்தது. இன்னும் மங்கையர் மீது கொள்ளும் காமம் விஷய காமம் என்றும், மாதவன் மீது கொள்ளும் காமம் பகவத் விஷயகாமம்’ என்றும் நூல்களில் நுவலப் பெற்றிருப்பதை யும் என் மனம் சிந்தித்தது. உலகப் புகழ் பெற்ற தாஜ் மகால் விஷய காமத்தின் சின்னம்’ எனவும், இராம மந்திர், பகவத் விஷயகாமத்தின் சின்னம்’ எனவும் என் மனம் எண்ணியது. முன்னதில் அன்பு காதல் முறையில் பரிணமித்து நிற்றலையும் அதே அன்பு பின்னதில் பக்தி யாக உருவெடுத்து நிற்றலையும் நினைந்து பார்க்க முடி கின்றது.இதனையெல்லாம் சிந்திக்கும் நிலையில் சென்னை யிலுள்ள வள்ளுவர் கோட்டம் நினைவிற்கு வராமல் நி-29