பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 96 நினைவுக் குமிழிகள்-4 போகுமா? தமிழ்மொழியின் தலையாய இலக்கியமாகிய திருக்குறளுக்கு நினைவாலயம் எழுப்பிய டாக்டர் கலைஞர் கருணாநிதியின் தமிழ்க் காதலையும் நினைவுகூர முடி கின்றது.அம்மையாரின் இராமபக்திக்கு நாம் தலை வணங்கு கின்றோம்; இராம பக்தியின் இலக்கியச் சின்னமாகத் திகழும் துளசிதாசர் இராமாயணத்தின் சின்னமாகவும் விளங்குவதைக் கண்டு இறும்பூது அடைகின்றேன். (5) நகரத்தார் சத்திரம் பெரும் செல்வர்கள் வந்து தங்கும் இடமாதலால் காசியில் கிடைக்கும் அபூர்வப் பொருள்களைக் கொண்டு வந்து சத்திரத்திலுள்ள பெரிய திண்ணைகளில் காட்சிக்கு வைப்பார்கள் அவ்வூர் வணிகர் கள். காசிப் பட்டு பெயர் போனதல்லவா? பட்டுத் துணி வணிகர்களும் அபூர்வ ரகப்பட்டுச் சேலைகளைக் கொண்டு கடை விரிப்பார்கள். நாங்கள் சில பொருள்களை சத்திரத் திலேயே வாங்கிக் கொண்டோம். சேலைகள் வாங்கு வதற்குத் திரு. வினை தீர்த்தான் செட்டியார் ஆற்றுப் படுத்திய கடைக்குச் சென்று பட்டுரகங்களைப் பார்த் தோம். என் மனைவிக்குக் கடையையே வாங்கிவிட வேண்டும் என்ற ஆசைதான். பட்டுரகங்கள் கண்ன்னப் பறிக்கின்றன. எங்கட்குப் பெண் பிள்ளைகள் இராததால் வாங்குவதில் ஆசையைச் சுருக்கிக் கொண்டு ஒன்றிரண்டு உருப்படிகளை மட்டிலும் வாங்கிக் கொண்டு திரும்பி னோம். (6) ஒரு நாள் பகலுணவிற்குப் பிறகு கங்கையின் வடகரையிலுள்ள காசி அரசரின் அரண்மனையைப் பார்க்கச் சென்றோம். பேருந்துகள் அடிக்கடி உண்டு. எளிதாகப் போய் அனைத்தையும் சுற்றிப் பார்த்து விட்டு வீடு திரும்பினோம். அரிச்சந்திர புராணத்தில் வரும் காசி அரசரை நினைந்து பார்க்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. (7) என் மனைவிக்கு நச்சுக் காய்ச்சல் ஏற்பட்ட தால் 25 நாட்கள் காசியில் தங்கவேண்டி நேரிட்டதால்,