பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசியில் சில நிகழ்ச்சிகள் 367 மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் மிட்டாய்த் திருவிழா வைக் கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இஃது தமிழகத்தில் சிவாலயங்களில் நடைபெறும் * அன்ன அபிஷேகத்தைப் போன்றது. அன்ன அபிஷேகம் நடை பெறும் அன்றுதான் இஃதும் நடைபெறுவது வழக்கம். காசியிலுள்ள கோயில்களின் அர்ச்சகர்கள் ஒன்று சேர்ந்து அவ்வூரிலுள்ள அங்காடிக்காரர்களிடம் தலைக்கு ரூ5lவீதம் வசூலிப்பார்கள்: டிக்கெட் போட்டு வசூலிப்பார்கள், இவ்வாறு சேரும் பணத்தைக் கொண்டு பல்வேறு இனிப்பு வகைகளைத் தயார் செய்வார்கள். இந்த இனிப்பு வகை கள் காசிவிசுவநாதர் கோயில், அன்னபூர்ணி ஆலயம், விசாலாட்சி கோயில் இந்த மூன்று கோயில்களிலும் உள்ள சுவர்களில் உள்ளும் புறம்புமாக அடுக்கி விடுவார்கள். கோயில்களின் தோற்றம் மிட்டாய்களால் கட்டப் பெற்றது போல் காணப்படும். ஒரிரவு, ஒருபகல்-இந்த அலங்காரம் கலைக்கப்பெறாமல் இருக்கும். ஊர் மக்கள் திரள் திரளாகச் சென்று கோயில்களிலுள்ள மூத்தங்களை வழிபடுவார்கள். மாலையில் அலங்காரங்கள் கலைக்கப் பெறும். இனிப்பு வகைகள் காகித உறைகளில் போடப் பேற்று டிக்கெட் வாங்கின புள்ளிகளுக்குப் பிரசாதமாக" வழங்கப்பெறும். இத்தகைய ஒரு காட்சியைக் காசியில் கண்டு மகிழ்ந்தோம். ரசகுல்லா, குலோப்ஜாமுன் வகை வகைகள் திரவத்திலிருப்பதால் இவ்வகை இனிப்புகள் இந்த விழாவில் செய்யப் பெறுவதில்லை. காரணம், இவற்றைக் கொண்டு சுவர்களை அலங்கரிக்க முடியாது. இவ்வளவு இனிப்பு வகைகளிலிருந்தும், எங்கும் எறும்பு களே காணப் பொறாதது ஒரு தனிச்சிறப்பாக இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். இதுதான் சிறப்பு என்றும் அந்த ஊர் மக்களும் பேசிக் கொண்டதையும் கேட்டேன். (8) காய்ச்சலால் பீடிக்கப்பெற்ற என் மனைவியைக் கவனிக்க மருத்துவர் ஒருவருக்கு ஏற்பாடு செய்தார் திரு வினைதீர்த்தான் செட்டியார். மூன்று நாள் ஆள்