பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@静8 நினைவுக் குமிழிகள்.4 மிதிவண்டியில் மருத்துவரிடம் போய் வந்தோம். ஊசி போட்டார்: மாத்திரைகள் உண்ண ச் செய்தார். விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூர்ணி இவர்கள் திருவருளால் அதிகத் தொல்லை விளைவிக்காமல் நோய் நீங்கி விட்டது. (9) ஒருநாள் காலை சிற்றுண்டிக்குப் பிறகு கங்கைக் கரையிலுள்ள 64 படித்துறைகளைக் காணச் சென்றோம். நகரச் சத்திரத்தில் தங்கியிருந்து சில ஆச்சிமார்களும் எங்களுடன் வந்தனர். சாதாரண பெரிய படகொன்றில் சென்றோம். வேறு சிலரும் படகில் வந்தனர். படகோட்டி ஒவ்வொரு துறையருகிலும் படகை நிறுத்துவான். திருத்தலப் பயணமாக வருபவர்கள் ஒவ்வொரு துறை யிலும் ஒரு முழுக்கு' போடுவது வழக்கம். ஆனால் காலையில் ஒரு துறையில் நீராடினதோடு சரி. இப்போது, ஒவ்வொரு துறையிலும் கங்கை நீரை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டோம். படகோட்டி ஒவ்வொரு துறையின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே வந்தான். விசைப்படகுகளும் இருந்தன. நாங்கள் சாதாரணப் படகையே தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மெதுவாகச் சென்றால்தான் காட்சிகளைக் கண்டு நன்கு அநுபவிக்க முடியும் என்று திரு வினைதீர்த்தான் செட்டியார் யோசனை கூறியிருந்தார். அரிச்சந்திரப்படித் துறையருகில் வரும்போது சுடுகாட்டைக் கண்டோம். சில பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. சில பிணங்கள் எரிவதற்குத் தயாரில் இருந்தன. பிணங்கள் எரியாத நாட்களே இல்லை யென்று படகோட்டி சொன்னான். நான் அரிச்சந்திர புராணத்தில் வரும் சுடுகாட்டுக் காட்சிகளை நினைத்துக் கொண்டேன். அந்தப் புராண ஆசிரியரின் கற்பனைத் திறள் இக்காட்சிகளை நேரில் கண்டபின் பல மடங்கு. அதிகரித்ததை எண்ணி மகிழ்ந்தேன். சுமார் ஐந்து அல்லது ஆறு மணிநேரம் படகில் இருந்ததாக நினைவு. இவ்வளவுக்கும் தலைக்கு ரூ - தான் கொடுத்தோம்.