பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்திப் பயணம் 309 திருத்தலப் பயணிகளின் வசதிகட்காக ஏராளமான படகுகள் கங்கைக் கரை ஓரமாக உள்ளன. அப்பகுதி மக்களில் சிலருக்கு இதுவே வாழ்க்கைத் தொழிலாகவும் இருக்கின்றது. குமிழி-197 41. அயோத்திப் பயணம் 15ான் காசிப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன் என் சிறுவர்கட்கு நான் 1960-66இல் உணவு கொண்ட வேங்கடேசுவர பவனில் உணவுக்கு ஏற்பாடு செய்தேன். இரண்டு வேளை (பகல், இரவு) அங்கு சாப்பிடுவார்கள்; சிற்றுண்டி விருப்பமான இடத்தில் கொள்வார்கள். மூத்த மகன் இராமலிங்கம் பி எஸ் சி. யும் இளைய மகன் tuż z frang su GÜL? solí (Central School) Litą š#9 வந்தனர். நாங்கள் குடியிருந்த உமாமகேசுவர ரெட்டி குடியிருப்பிற்கெதிரிலேயே பள்ளி இ ரு ந் த தால் இளையவனுக்குச் செளகர்யம்: மூத்தவன் காலையிலேயே பகலுணவை முடித்துக் கொண்டு பல்கலைக் கழகம் செல்ல வேண்டும்; நண்பகவில் அங்கு உணவு விடுதியில் சிற்றுண்டி கொள்ளவேண்டும், இளையவனுக்கு ஊருக்குள்ளேயே இவற்றிற்கு வசதி இருந்தாலும் ஒரு கி.மீ, போய் வர வேண்டும். மூத்தவன் 3-4 கி.மீ போய் வரவேண்டும். இருவருக்கும் தனித்தனியாக மிதிவண்டிகள் இருந்தன காசியில் நாங்கள் தங்கியிருந்தபோது அடிக்கடிச் சிறுவர்க களின் நினைவு வரும் எப்படி உணவுகொள்கின்றார்களே? வீடு பாதுகாப்பாகப் பூட்டப் பெறுகின்றதோ? என்றெல்லாம் கவலை எழும். எங்கட்கு எந்தவித