பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 (9. நினைவுக் குமிழிகள்-4 பிரச்சினைகளையும் தராமல் நன்கு படித்து வந்த வர் களாதலால், நாங்கள் இல்லாதபோதும் தம்மை நன்கு கவனித்துக் கொள்வார்கள் என்ற மனஉறுதி இருந்தாலும் பெற்றமணம் பித்தல்லவா? என்றாலும் கவலைகள் எழும்: மறையும். ஏழுமலையான் நிழலில் வாழ்பவர்கட்கு எந்த வித இடையூறும் இராது என்ற மன உறுதியுடன் இருந்தோம். ஒருநாள் அயோத்தி போய்வர நினைத்தோம். ஒரு நாள் அதற்கென்று குறிப்பிடப் பெற்றது. முதல் நாள் காலையிலேயே ஒர் ஆளை எங்களைக் கவனித்துக் கொள் வதற்கு அயோத்திக்கு அனுப்பி வைத்தார் திரு. வினை தீர்த்தான் செட்டியார்.இந்த ஆள் குன்றக்குடியைச் சேர்ந்தவர்; பண்டார வகுப்பைச் சார்ந்தவர். நல்ல அறிவுள்ளவர். சத்திரத்தில் தங்கியிருந்தபோதே இவர் சுறு சுறுப்பாக இயங்கிச் செயற்பட்டதைக் கண்டேன். நாங்கள் மறுநாள் சிற்றுண்டிக்குப் பிறகு புறப்பட நினைத் திருந்தோம். புறப்படவேண்டிய நாள் காலையில் திருச்சி மாவட்டம் நாரணமங்கலத்தைச் சார்ந்த கணபதி ரெட்டியார் மகன் திரு. நடராசனைச் சந்தித்தேன். திரு. நடராசன் சென்னையிலிருந்து வடநாட்டிற்கு லாரி மூலம் சரக்கு அனுப்பும் தொழில் செய்து கொண்டிருந்தார். இத்தொழில் காரணமாக வடநாட்டிற்கு வந்தவர் அவர் தந்தையாரின் ஆண்டுத் திவசத்தைக் கங்கைக் கரையில் கொடுக்க நினைத்துக் காசிக்கு வந்திருப்பதாகச் சொன்னார். நான் அவரைப் பார்த்த அன்று திதி கொடுக்கப்போவதாகவும் ஒரு தென்னிந்திய அந்தணரைக் கொண்டு பத்துப் பேருக்கு உணவு தயாரிக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார் எங்கள் இருவரையும் திவச விருந்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டினார். நாங்கள் பத்து மணி சுமாருக்கு அயோத்தி பயணத்திற்கு ஏற்பாடு செய்து விட்டதால் விருந்தில் கலந்து கொள்ள இயலாமையை வருத்தத்துடன் தெரிவித்தேன். கலந்து