பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்திப் பயணம் 3 1 1 கொண்டிருந்தால் எங்களுக்கும் அவருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். பத்து மணிக்கு அயோத்தி செல்லும் இருப்பூர்தியில் ஏறினோம். ஒதுக்கீடு செய்ய வேண்டியதற்குரிய பெட்டி யில் ஏறிக்கொண்டோம். அந்தப் பெட்டியில் பெரும் பாலான உட்காரும் இடங்கள் காலியாகவே இருந்தன. பயணச் சீட்டுப் பரிசோதகர் எங்கள் சீட்டுகளைக் காட்டும் படி கேட்டபோது ஒதுக்கீட்டுக் கட்டணம் வாங்கிக் கொண்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டோம். அவர் 300 கி. மீ. க்குக் கீழ் ஒதுக்கீடு செய்யமுடியாது என மறுத்துவிட்டார். அருகிலிருந்த ஒருவர் தனியாக அவரிடம் சென்று ரூ 2). அவர் சட்டைப்பையில் திணிக்குமாறு சொன்னார்; நானும் அப்படியே செய்தேன். அதை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். இதே பெட்டியில் பலர் ஒதுக்கீடு செய்யாமல் ஏறியிருந்தும் அவர்களை ஒன்றும் கேட்கவில்லை. அவர்கள் சொன்னார்கள்: "எங்களிடம் வந்து தகராறு செய்தால் ஒடும் வண்டியி லிருந்து கீழே தள்ளிவிடுவோம் என்று எங்களிடம் வரவில்லை. நீங்கள் தென்னிந்தியர்கள் என்று தெரிந்து தான் உங்களிடம் வந்தார். எங்களில் சிலர் பயணச்சீட்டு இன்றியே பயணம் செய்கின்றோம்' என்று. வடநாட்டின் இருப்பூர்திப் பயண நடப்பு ஒருவாறு புரிந்தது. எங்களையும் இறங்கி வேறு பெட்டிக்குப் போகுமாறு வற்புறுத்தாததால் நாங்களும் செளகர்யமாகவே அயோத்தி வரை வந்து விட்டோம். இந்தப் பரிசோதகர் நல்லவராகத்தோன்று கின்றார் என்று எங்களோடு பயணம் செய்தவர்கள் பேசிக் கொண்டதை அறிந்தேன். மாலை சுமார் நான்கு மணிக்கு வண்டி அயோத்தி நிலையத்தை அடைந்தது. எங்களுக்காக முதல் நாளே வந்திருந்த பண்டாரம் இரயிலடிக்கு எங்களை வரவேற்க வந்திருந்தார். ஒரு டோங்காவை அமர்த்திக் கொண்டு "நாட்டுக் கோட்டை நகர சத்திரத்தை (Narkot Sriram