பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 # நினைவுக் குமிழிகள்-4 Mandiri Babu Bazaar, Ayodhya, Fyzabad, U.P.) அடைந்தோம். ஒரு காலத்தில் மிகச் சிறப்பாக இயங்கி வந்த சத்திரம் இச்சமயம் நிலை சரியில்லாதிருந்தது. தங்குவதற்குப் பாதுகாப்பான இடம். படுக்கப் பாயும் தலையணையும் கிடைத்தன. இங்கும் ஒரு பண்டாரம் தான் சத்திரத்தின் பொறுப்பாளராக இருந்தார். இரவு உணவுக்கு ஒரு சிறு சிற்றுண்டிச் சாலையைக் காட்டினார் காசியிலிருந்து வந்த பண்டாரம். பூரி, பால் கிடைத்தன; கிடைத்தவற்றைக் கொண்டு நாங்கள் திருப்தி அடைந்தோம். மறுநாள் காலை அதிகாலையில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு சரயுநதிக்கு நீராட எங்களை இட்டுச் சென்றார் பண்டாரம். நாங்க நீராடச் சென்றபோது சரயுநதியில் வெள்ளம் பெருக் கெடுத்து ஒடிக்கொண்டிருந்தது. சரயு' என்பதற்கு (கைலாசகிரியிலுள்ள) மானச மடுவில் தோன்றுவது என்று பொருள்படும். இருகரையும் வழிந்தோடுவது போன்று. வெள்ளம் பெருகியோடினாலும், வெள்ளம் அமைதியாகத் தான் சென்றது. படித்துறையில் அச்சமின்றி நீராடலாம். வெள்ளத்தில் சுழற்சி, இழுப்பு முதலியன இல்லை : இதுவும் கங்கை போன்ற அகலமான நதிதான். நீர் பாசனத்திற்குப் பேரளவில் பயன்படுவதாகச் சொன்னார் வழிகாட்டியாக வந்த பண்டாரம். இந்த வெள்ளத்தைப் பார்த்து வியப்படைந்த என் உள்ளம் சரயுநிதியின் வெள்ளத்தைப் பற்றி வருணிக்கும் பாசுரங்களை நினைந்து மகிழ்ந்தேன். பாசன வசதியைப் பற்றிப் பண்டாரம் கூறியபோது, இரவி தன்குலத் தெண்ணில்பல் வேந்தர் தம் புரவு நல்லொழுக் கின்படி பூண்டது 1. கம்பால. பால். ஆற்றுப் படலம்- (6-11).