பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்திப் பயணம் 31 3. சரயு வென்பது தாய்முலை யன்னதிவ் உரவு நீர்நிலத்தோங்கும் உயிர்க்கெலாம்.” (இரவி-சூரியன்; புரவு-பாதுகாத்து வந்த படிதன்மை; உரவு நீர்-விரிவும் தன்மையுடைய நீர்! என்ற கம்பநாடன் பாடல் மனத்தில் குமிழியிட்டது. சரயு, தன் நீரை இவ்வுலகத்தாரை உண்பித்து, உணவுப் பொருள்களை யுண்டாக்கியும் வளர்க்கும். தாரகமாகவும் போஷகமாகவும்இருத்தலினால் தாய் முலைப்பால் உவமை யாயிற்று. சூரியகுலத்து மன்னவரின் தொன்று தொட்டு வந்த நல்லொழுக்கம் என்றும் ஒரு படிப்பட்டிருப்பதுபோல இந்தச் சர யு நதியின் நீர்ப் பெருக்கும் ஒருபடியாக ஒடு வதைக்கண்டு மகிழ்ந்தேன். நீராடும்போது நண்டுபோன்று ஒருவகை நீர்வாழ் பிராணி உடம்பை நெருடும்; சிறிது கூச்சத்தை உண்டாக்கினாலும் அச்சமின்றி நீராடலாம் என்று பண்டாரம் சொன்னார். நீராடி மகிழ்ந்தோம். சத்திரத்திற்கு வந்து ஈர ஆடைகளை உலர்த்திவிட்டு, அண்மையிலுள்ள சிற்றுண்டி விடுதியில் உணவு கொண்டு ஒரு டோங்காவை அமர்த்திக் கொண்டு அயோத்தியிலுள்ள முக்கிய இடங்களைப் பார்க்கச் சென்றோம். காசியிலிருந்து வந்த பண்டாரம் எங்கட்கு வழிகாட்டியாக இயங்கினார். முதலில் டோங்கா ஒரு மசூதியருகில் வருகின்றது. முகம்மதியர் படையெடுப்பின் பொழுது பழைய திருக்கோயிலை இடித்து அவ்விடத்தில் ஒரு மசூதி எழுப்பப் பெற்றதை அறிகின்றோம். மசூதியின் ஒரு பகுதி இராமன் பிறந்த இடம் எனக் காட்டப் பெறுகின்றது. அம்மி, ஆட்டுக்கல், மருந்தரைக்கும் கல்வம் போன்ற அடையாளங்கள் இங்கு வைக்கப் பெற்றுள்ளன. இவை யெல்லாம் பிற்காலத்தில் முகம்மதியர் பழைய திருக் கோயிலை இடித்த பிறகு வைக்கப் பெற்றவை. இந்துமுஸ்லீம் மோதல் நேரிடாத வண்ணம் முன்னுாற்றுக்கு மேற்பட்ட போர் வீரர்கள் காவலுக்காக வைக்கப் 2. டிெ-பால் . 12: