பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #4 நினைவுக் குமிழிகள்-4 பெற்றுள்ளனர். இந்த இடம்தான் இன்று செய்தித்தாள் களில் பேர் அடிபடும் இராமஜன்ம பூமி போலும்! இந்த மசூதிக் கருகில் சரயு நதிக்கரையில் தென்னிந்தியப் பாணியில் 'அம்மாஜி மந்திர் என்ற ஒரு புதிய கோயில் கட்டப் பெற்றுள்ளது. இங்கு இராமன். பிராட்டி, தம்பியர், சிறிய திருவடி சூழ மகுடம் சூட்டிய கோலத்தில் காட்சி அளிக்கின்றான். இவனைப் பார்த்து அழகில் ஈடுபடும்போது, அரியணை அதுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச விரைசெறி குழலி யோங்க வெண்ணையூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி.” என்ற கம்பனின் பாடல் நம் மனத்தில் எழுகின்றது. கோயில் மிகத் தூய்மையாக வைக்கப் பெற்றுள்ளது: மூர்த்தியின் திருக்கோலம் கை புனைந்தியற்றிய கவின் பெறு வனப்பெல்லாம் திரண்டு அமைந்துள்ளது. கண்டாரின் கவனத்தை ஈர்க்கவல்ல பெற்றியுடன் திகழ் குன்றது. நாமும் இராமனின் முடிசூட்டு விழாவில் கலந்து, கொண்டுள்ளோம் என்ற மன நிறைவை அடைகின்றோம். இவ்விடத்தில் திவ்விய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின், ஆர்க்கும் இது நன்று தீதானாலும் நெஞ்சேநீ பார்க்கும் பலகலையும் பண்ணாதே-சீர்க்கும் .ே கம்பரா யுத்த-திருமுடிசூட்டு-38,