பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்திப் பயணம் Ꭿ1 ☾ திருவையோத் திப்புயலைச் சீரியமெய் ஞானத் துருவை யோத்திற் பொருளை யோர்.* (அயோத்திப் புயல்-இராமன்; மெய்ஞ்ஞானத்து உரு-தத்துவ ஞான சொரூபி; ஒத்து-திருமறை1 என்ற பாடல் நினைவிற்கு வருகின்றது. இது நெஞ்சை விளித்துக் கூறுவதாக அமைந்துள்ளது. தருக்கம் வியாகரணம் முதலிய உலகியல் பற்றிய நூல்கள் பல வற்றையும் ஒதிப் பழுதே பல பகலும் போக்காமல், தத்துவ ஞான சொரூபியாகிய இறைவனையே தியானம் செய்யுமாறு மனத்தை ஆற்றுப்படுத்துகின்றார் அய்யங்கார். இதில் ஆழங்கால் பட்டிருக்கும் நிலையில், மும்மைகால் உலகுக்கு எல்லாம் மூலமந் திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமந் தன்னை" என்ற கம்பனின் திருவாக்கும் நினைவிற்கு வருகின்றது. இராமனைவிட இராம நாமத்தின் பெருமையினை நன்கு உணர்கின்றோம். திரெளபதிக்கு ஆபத்திலே புடவை சுரந்தது திருநாமமிறே." என்ற முமுட்சுப்படியின் வாக்கியத்தினையும் சிந்திக் கின்றோம். அயோத்தியில் மட்டிலும் 2700 இராமனின் திருக்கோயில்கள் உள்ளனவென்று கேள்வியுறுகின்றோம். 4. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி-98. 5. கம்பரா. கிட்கிந்தை-வாலிவதை-71. 6. முமுட்கப்படி-16,