பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 6 நினைவுக் குமிழிகள்-4 அயோத்தியில் இல்லங்கள் தோறும் இராமன் திருவுரு வத்தை வழிபடுகின்றனர். இவற்றையும் திருக்கோயில் களாகக் கொண்டு கணக்கிட்டனர் போலும் என்றாலும், திருவயோத்தியில் இராம பக்தி உச்சநிலையில் உள்ளது என்பதை மறுத்தற்கில்லை. இத்திருக்கோயிலிலிருந்து சற்றேறக்குறைய ஆறு கி. மீ. தொலைவில் சரயு நதியில் குப்தர் படித்துறை" உள்ளது. இராமன் சரயுநதியில் மூழ்கித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளின இடம் இதுதான் என்று சொல்லுகின்றர். இந்த இடம் வந்ததும், அன்றுசரா சரங்களை வைகுந்தத் தோற்றி அடலரவப் பகையேறி அசுரர் தம்மை வென்றிலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுதும் எதிர்வரத்தன் தாமம் மேவி .? |தாமம்-இடம்1 என்ற குலசேகரப் பெருமாளின் திருமொழிப் பகுதியும் நம் நினைவில் எழுகின்றது. இந்நிலையில் நாம் நம்மையும் மறந்து நாமும் முக்தராக வைகுந்தத்திற்குச் செல்லும் அநுபவத்தைப் பெறுகின்றோம். சர:புவில் இருவினைகளும் கழன்று போகின்றன என்ற அநுபவத்தையும் பெறு கின்றோம். இங்கிருந்து சரயு நதிக்கரையிலுள்ள அநுமான் தேக்ரி' என்று வழங்கப்பெறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரு கின்றோம் இங்கு எழுந்தருளியிருக்கும் சிறிய திருவடி பேருருவம் கொண்டவர். தலைப்பகுதி மட்டிலும் வெளி யில் தெரியுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதனைக் காணுங்கால் அநுமன் அசோக வனத்தில் சீதாப்பிராட் டிக்குக் காட்டின பேருருவம் நினைவிற்கு வருகின்றது." 7. பெருமாள் திருமொழி 10 : 10 8. கம்ப ரா. சுந்தர. உருக்காட்டுப்-(99-105)