பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்திப் பயணம் 31 7 இத்திருக்கோயிலெங்கும் இராம பக்தர்கள் துளசி ராமாயணத்தைப் படித்த வண்ணம் உள்ளனர். தாம் கோரிய யாவற்றையும் அளிக்கவல்லவன் மாருதி என்ற நினைப்பில் இச்சீரிய பணியில் ஈடுபட்டுள்ளனர்போலும். அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றா றாக ஆரியற் காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண் டயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்’ என்ற பாட்டால் இச்சொல்லின் செல்வனை வணங்கிக் சத்திரத்திற்குத் திரும்புகின்றோம். வரும்போது அயோத்தி’ என்ற சொல் போர் செய்து பகைவர்களால் வெல்ல முடியாதது" என்ற பொருளை யுடையது என்று அறிகின்றோம். அரண் முதலியவற்றால் மிக்க பாதுகாவலையுடையது. பழங்காலத்திய அயோத்தி . இப்பொழுதுள்ள தீர்த்தங்களில் ஒன்றாகிய சகஸ்திர தாரையில் மேற்குத் திக்கில் ஒரு யோசனையும், கிழக்குத் திக்கில் ஒருயோசனையும், வடக்குத் திக்கில் சரயு நதியும், தெற்குத் திக்கில் தமசா நதிவரையிலும் இருக்குமாறு பரவியிருந்தது என்று சொல்லப் பெறுகின்றது. இதனையும் அறிகின்றோம்.அவசரஅவசரமாகச் சிறு விடுதியில் காய்ந்த சப்பாத்தியை உண்டு இருப்பூர்த்தி நிலையத்திற்கு விரைகின்றோம், வழிகாட்டிய பண்டாரமும் எங்களுடன் வருகின்றார், 9. கம்ப ரா பாலகண்டம்-காப்பு (அநுமன் துதி)