பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 1 & நினைவுக் குமிழிகள்-4 கங்கைக்கரையோரத்திலுள்ளபலபகுதிகள் பாலைவன மாக இருப்பதை இருப்பூர்தியில் வரும்போது காண் கின்றோம், இதற்குக் காரணம் என்ன என்று நான் பண்டாரத்தைக் கேட்க அவர் சொல்லுகின்றார்: "இப்பக்கத்து மக்கள் மிகவும் சோம்பேறிகள், சேலம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த உழவர்கள் சிறிது தண்ணீர் கிடைத்தாலும் இரண்டு பாத்திகளிலாவது ஏதாவது பயிரிடுவதைப் பார்க்கலாம். அவர்கள் இங்கிருந் தால் இதில் பொன் விளையச் செய்து விடுவர்' என்று. அன்று இரவு எட்டு மணிக்குக் காசி வந்து சேர்ந்தோம். குமிழி.1988 42. கயைச் செலவு ஒருநாள் கயைஎன்றதிருத்தலப் பயணத்திற்குத் திட்ட மிட்டேன். திரு. வினைத்தீர்த்தான் செட்டியார் முன்னரே கடிதம் போட்டு அந்த ஊரிலுள்ள நாட்டுக்கோட்டை நகர சத்திரப் பொறுப்பாளரை இருப்பூர்திநிலையத்திற்கு வந்து எங்களை அழைத்துப் போமாறும், திதி முதலிய வற்றிற்கு நல்ல புரோகிதரை ஏற்பாடு செய்யுமாறும் எழுதியிருந்தார். குறிப்பிட்ட நாளன்று மாலையில் நானும் என் மனைவியும் புறப்பட்டோம். கயைபகுதியில் கொள்ளையர் கூட்டம் அதிகம் என்பதை நான் முன்னரே கேள்வியுற்றிருந்தேன். பல்வேறு செய்திகளையும் நாளிதழ் களில் படித்திருந்தேன். இன்றும் (ஏப்பிரல்-1990) பல கொள்ளை கொலைபற்றிய செய்திகள் நாளிதழ்களில் வந்து கொண்டிருக்கின்றன. தென்னாட்டு நாளிதழ் களில் வாராத செய்திகளும் இருக்கும். சிறிது அச்சத்தி