பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயைச் செலவு 31 9 னுடன்தான் பயணத்தைத் தொடங்கினோம். அதிகால்ை 5-30 மணிக்குக் கயையை அடைந்தோம். நகர சத்திரப் பொறுப்பாளர் ஒரு பண்டாரமும் பயணிகளின் தரகரும் வேறொருவருமாக மூவர் எங்களை நிலையத்தில் மேம்பாலத்தில் இறங்கிவரும் போதே வரவேற்றனர். முன்பின் அடையாளம் தெரியாதவர்கள் ஒருவரை யொருவர் விரைவில் புரிந்து கொண்டு ஐக்கியமானது வியப்பினும் வியப்பே. இஃது எப்படி நிகழ்ந்தது? மூவரும் மேம்பாலத்திலிருந்து இறங்கி வரும்போது வழியில் வழிதிரும்பும் மூலையில் யாரையோ எதிர் பார்த்துக்கொண்டு இருக்கும் பாவனையில் நின்று கொண்டிருந்தனர். மூவரும் தமிழர்கள் என்பது அவர் முகத்திலும் உடுத்திக்கொண்டிருக்கும் ஆடைமுறையிலும் தெளிவாகத் தெரிந்தது. நாங்களும் யாரையோ எதிர் பார்த்தவண்ணம் பையும் கையுமாக வந்து கொண்டி ருந்ததை அவர்கள் கண்ணுற்றனர். ஒரு சில நொடிகளில் பேச்சுக் கொடுத்து ஐக்கியமானது விந்தையினும் விந்தை யாகும். பேசிக் கொண்டே இருப்பூர்தி நிலையத்தைவிட்டு வெளியில் வந்து ஒரு தோங்காவை அமர்த்திக்கொண்டு சத்திரப் பொறுப்பாளருடன் சத்திரம் இருக்குமிடத்திற்கு (174, Chand Chowla, Gaya, Bihar State) aufig Gärts; தோம். சந்திரத்திலேயே காலைக் கடன்களையும் நீராடலையும் முடித்துக் கொண்டோம். சத்திரத்துக்குப்பொறுப்பாளரான பண்டாரம்திதிக்குப் புரோகிதரை ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் புரோகிதர் பெங்களுரைச் சேர்ந்தவர்; தமிழ்ப் பேசுபவர். நல்ல சாத்திர அறிவு பெற்றவர். வடமொழி மந்திரங்களை நன்கு உச்சரிப்பவர். வடமொழி மந்திரங்களில் உச்சரிப்பு தான் முக்கியம் என்பதைத் தவத்திரு சித்பவானந்த அடிகள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். திதி, அருகில் ஒடும்ஆற்றங் கரையிலுள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. வசதி