பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 # 0. நினைவுக் குமிழிகள்-4 படைத்தவர்கள் 49 திதிகள் செய்யலாம் என்றும், செய்து முடிப்பதற்குப் பதினைந்து நாட்கள் ஆகும் என்றும் புரோகிதர் விளக்கினார். ஆனால் அவரே பல்குனி ஆறு, வடஆலமரம். விஷ்ணுபாதம் என்ற மூன்று இடங்களில் சிறப்பான முறையில் செய்யும் திதிகளினால் 49 திதிகளின் பயனை அடையலாம் என்றும் விளக்கினார். திதிக்கு ரூ 13| வீதம் மூன்று திதிகள் செய்ய ஏற்பாடு செய்யப் பெற்றது. திதிக்குரிய சாமான் கள் அனைத்தையும் புரோகிதரே வைத்திருந்தார். ரூ 391- கொடுத்தால். திதிகள் நன்றாக நிறைவு பெறும் என்றும் சொன்னார். முற்பகல் ஒன்பது மணிக்குத் திதிகள் ஆற்றங்கரையி லுள்ள மண்டபத்தில் தொடங்கப் பெற்றன. சாமான் களை முறைப்படி பரப்பி வைத்துக் கொண்டு தொடங்கி னார். என்னையும் என் துணைவியையும் ஒரு தருப்பை யாலான ஆசனத்தில் அமரச் செய்து மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே சடங்குகளை முறைப்படி தொடங்கி முடித்தார். முற்பகல் ஒன்பது மணிக்குத் தொடங்கப் பெற்ற சடங்குகள் பிற்பகல் மூன்று மணிக்கு நிறைவுற்றன. மூன்று இடங்களில் தென்புலத்தார்கட்குப் பிண்டம் போட வேண்டும். முதலில் பல்குனி ஆற்றில் போடச் செய்தார்; பின்னர் விஷ்ணுபாதத்தில் போடச் செய்தார். இந்த விஷ்ணுபாதம் உள்ள கட்டடம் விண்ணை முட்டும் அளவுக்கு மிகவும் உயர்ந்த கட்டடம் ஆகும். திருச்சி புனிதசூசைய்ப்பர் கல்லூரிக்கருகிலுள்ள மாதா கோயிலின் கோபுரத்தைப்போல் மிக உயர் ந் த. கோபுரத்தைக் கொண்டது. கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசம் 100 கிலோ தங்கத்தினாலானது என்று புரோகிதர் சொன்னார். இதில் உண்மையும் இருக்கலாம்; புனைந்துரை யாகவும் இருக்கலாம். எனினும் அது தங்கத்தாலாகா விடினும் தங்கத்தகட்டினாலாவது வேயப் பெற்றிருக் கலாம். இதைப் பற்றிய ஆய்வு நமக்குத் தேவை இல்லை. விஷ்ணுபாதத்தில் ஒன்பது பிண்டங்களைப் போடச்