பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயைச் செலவு 莒盛江 செய்தார். இச்சடங்கு செய்து விட்டால் பிறகு பெற்றோர் கட்குத் திதியே செய்ய வேண்டியதில்லை என்றும் சொன்னார். வருங்காலத்தில் சாத்திர நம்பிக்கையே அற்றுப் போகும் என்றும், எங்கள் மக்கள் எங்கட்குச் செய்யாமலும் விட்டுவிடலாம் என்றும், அதற்கு நாங்களே எங்கட்குப் பிண்டம் போட்டுக் கொள்ளலாம் என்றும் கூறி எங்கட்கும் விஷ்ணுபாதத்தில் பிண்டங்களைப் போடச் செய்தார். அடுத்து, அருகிலுள்ள வடஆலமரத்தின்கீழும் பிண்டங் கள் போடப் பெற்றன. பிறகு எங்களிருவரையும் கிழக்குப் பக்கமாகப் பார்த்துக் கொண்டு நிற்கச் செய்தார். பின்னர் எங்கள் இருவர் கைகளையும் தனித்தனியாகவும் பின்பு ஒன்று சேர்த்தும் கயிற்றைக் கொண்டு பலமாகக் கட்டினார். இப்போது அவர் சொன்ன்ார்: "ஐயா, கயையில் கொள்ளைக்காரர்கள் மக்களைக் கட்டி வைத்துக் கிட்டியில் மாட்டிப் பணம் பறிப்பார்கள் என்பதை அறிவீர்களா? இப்போது கட்டிலிருந்து விடுவித்துக் கொள்ள என்ன தருவீர்கள்?' என்று. நான் சொன்னேன்: "எங்களிடம் பொருள் ஒன்றும் இல்லை. வழிச் செலவுக்குத் தான் சொற்பத்தொகை எங்களிடம் உள்ளது. இப்போது தான் திதி கொடுத்தோம். அதிதிகட்கு அமுது படைக்க வேண்டும் என்பது திதி பற்றிய விதி. எங்கட்குச் சமைக்க வழி இல்லை. நாங்களே இன்று அதிதிகளின் நிலையில் உள்ளோம். மூன்று பிராமணர்கட்கு அமுது படைப்போம். மூவரைக் கொண்டு வந்து எங்கள் முன் நிறுத்தினால் தலைக்கு ரூ.51 வீதம் (ஒரு சாப்பாட்டு விலை ரூ 15தரும்வன்' என்று. சிறிது நேரத்தில் மூன்று அந்தணர்கள் கள் வந்தனர். அவர்களிடம் ரூ.15l- தந்து கட்ட விழ்ப்பித்துக் கொண்டோம். இப்படிப் புரோகிதர் நகைச் சுவையாகத் திதியை முடித்து மகிழ்ந்தார்: நாங்களும் மன நிறைவு கொண்டோம். - - தி-21