பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@然含 நினைவுக் குமிழிகள்.4 திதிக்குப் புறப்படுவதற்கு முன்னர் 'திதி முடிய பகல் இரண்டு மணிக்கு மேலாகும். இந்த ஊரில் நல்ல உணவு விடுதிகளும் இல்லை. ஆகவே, நான் நீராடி உங்கட்குத் திதி சாப்பாடு தயார் செய்து வைப்பேன். திதி முடிந்ததும் நேராக உணவுக்கு வரலாம்.’’ என்று சொன்னார் பண்டாரம். அவர் சொல்லியவாறே பிற்பகல் 3-30க்கு சத்திரத்திற்குத் திரும்பும்போது உணவு தயாராக இருந்தது. உண்டு மகிழ்ந்தோம். இரவு பாலும் பழமு மாகச் சொற்ப உணவுடன் கழிந்தது. மறுநாள் காலை எட்டு மணிக்குப் புத்த கயைக்குப் போய் வரலாம் என்றும், அதற்காக ஆள் மிதிவண்டி போய் வருவதற்கு ரூ 7/வாடகையில் பேசி வைத்திருப்பதாகவும் சொன்னார் பண்டாரம். மறுநாள் காலை ஏதோ சிற்றுண்டி தயார் செய்து தந்தார்; புத்த கயையில் சில நல்ல உணவு விடுதி கள் உள்ளன என்றும், உணவுப் பொருள்கள் சற்று விலை அதிகமாக இருப்பினும் தூய்மையாக இருக்கும் என்றும் கூறினார். சரியாகக் காலை எட்டு ம ணி க் கு ப் புத்த கயைக்குப் புறப்பட்டோம். சுமார் ஏழு மைல் தூரத்தை ஒன்றரை மணி நேரத்திற்குள் கடந்து விட்டோம். ஆள் மிதிவண்டியை ஓரிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு இடத்தை நடந்தே சுற்றிப் பார்த்தோம். 'குவலயத்தில் அருள் மாரி பொழியும் ஐயன்" புத்தர் பிரான் ஞானஒளி பெற்ற இடத்திற்கு வந்ததும் என்னையறியாத புத்துணர்ச்சி என்பால் எழுந்தது. கூச்சல், குழப்பம், கேளிக்கை முதலிய ஒன்றும் இல்லாத அமைதியான இடத்தை முதன்முதலாக இங்குத்தான் கண் டேன். ஒருசிலர் அங்குமிங்கும் நடமாடினாலும் அவர்கள் நடையிலும் பேச்சிலும் அமைதி காணப் பெற்றது. அமைதி யான சூழ்நிலை தியானத்திற்கு ஏற்ற இடமாகத் திகழ்ந்தது. ஏன்? அந்த இடமே தியானத் திருவுருவாக இலங்கியது என்று சொல்லினும் மிகையாகாது, இந்த இடத்தில் போதி மரத்தடியில் ஞான ஒளி கண்ட புத்தர்