பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயைச் செலவு 3荔 பிரான் பின்னர் ஆசியஜோதி"யாக மலர்ந்த வரலாற்று திகழ்ச்சிகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக என் மனத்தில் விரைந்து குமிழியிட்டெழுந்தன. நானும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் புத்தர்பிரான் வாழ்ந்த காலத்துக்குத் தள்ளப் பெற்றேன்-மானசீகமாக. பாவனை உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினேன். தேவர் அவையில் இறைவன் பேசிய அருளுரை என் மனக்காதில் கேட்டது. வையகத்தில் உயிர்கள்மிக வாடக் கண்டேன்; வழியறியாது அவைமயங்கி வருந்தக் கண்டேன்; மெய்யிதுன்ன்று உய்யுநெறி காட்டி நன்மை விளைவிப்பர் எவரையுமே கண்ணிற் காணேன். எண்ணிரிய சென்மங்கள் எடுத்து முன்னம் எவ்வுடம்பின் எவ்வுயிர்க்கும் இடர்க ளைந்தேன்; மண்ணுலகம் ஈடேற இன்னும் ஒர்கால் மனிதஉடல் தாங்கமனத்து ஆசை கொண்டேன். இப்பிறப்பை யல்லாது பிறப்பு வேறிங்கு எனக்குமிலை; என்னைவழி பட்டு வாழும் ஒப்பரிய அடியவார்கள் எவர்க்கும் இல்லை; உண்மைஈது எந்நாளும் உண்மை யாமால் வானெழுந்து வளர்இமய மலையின் தென்பால் வாழும்உயர் சாக்கியர்தம் மன்ன னுக்கு யானும்ஒரு மகனாகச் செல்வேன்' என்று புத்தர் அவதரித்த செய்தி அறிந்தேன். பின்னர் அவர் மக்கள் அல்லலுறுங் காரணத்தை அறிய காடு மலை முதலிய இடங்களிலெல்லாம் அலைந்து திரிந்த வரலாறு களையெல்லாம் என்மானதக் காட்சியில் புலனாயின. அவர் யசோதரையை மணந்ததும், அவள் அந்தப்புரத்தில் இருந்தபோது அவர்மட்டும் தேவகீதம். கேட்டதும், 1. ஆசிய ஜோதி-புத்தர் அவதாரம் (1-4)