பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.24 நினைவுக் குமிழிகள்-4 புழுதி நிறைந்த பூமி எனக்குப் பழுதி லாத பஞ்சனை யாகும் பாழிட மான பாலையை நல்ல வாழிட மாக மதித்து வாழ்வேன்; ஏழைப் பிராணி எதனொடும் அன்பாய்த் தோழமை பூண்டு துணைசெய் திடுவேன்; பணிசெய் பள்ளர் பறையர் அணியும் துணியை அரையில் சுற்றித் திரிவேன்; தெருத்தெரு வாகத் திரிந்து பெற்ற பருக்கையை உண்டு பட்டினி போக்குவேன்' என்று சொல்லிக் கொண்டு துறவு பூண்டதும், யசோதரையை நோக்கி, 'நீள்நில மீது நித்தியா னந்த வாழ்வை யடையும் வழி இது வென்று தீவிர மான தியானத் தாலும் ஒய்வில் லாத உழைப்பி னாலும் அறியலா மென்னில் அறிந்து வருவேன்; வாடி வருந்தி மன்னுயி ரெல்லாம் அடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன்’ என்று கூறி வெளியேறியதுமான நிகழ்ச்சிகள் படக்காட்சி. காண்பதுபோல் என்மானதக் காட்சியில் தெரிந்தன. பின்னர், வழி நடந்த களைப்பால் ஓர் ஏழை இடைச் சிறுவன் கலத்தில் கறந்து தந்த பாலைப் பருகித் தளர்ச்சி நீங்கியதும் பிம்பசார மன்னன் செய்யும் வேள்விக் காக நடத்தி செல்லப் பெற்ற ஆட்டு மந்தையைக் கண்டு இரங்கியதும், துள்ளும் மறியொன்றினைச் சுமந்து கொண்டு, 2. ஆகிய ஜோதி-சித்தார்த்தன் துறவு-அடி(68-78) 3. டிெ-டிெ-அடி (256-62) - -