பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔器叙 நினைவுக் குமிழிகள்.4 ஆதலால், தீவினை செய்யவேண்டாம்-ஏழை ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டாம்: பூதலந் தன்னை நகரம தாக்கிடும் புத்தியைவிட்டுப் பிழையும்,ஐயா!' என்பன போன்ற அறிவுரைகளும் என் மனக் காதில் கேட்டன. 'என்ன, நினைவு மறந்தீர்களா? இன்னும் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்க்க வில்லையே. நேரத்தில் திரும்ப வேண்டும்.மிதிவண்டி ஆள் காத்திருக்கின்றான்'என்று என் மனைவி சொன்ன போதுதான் நான் புத்தர் "ஞான ஒளி பெற்ற போதி மரத்தடியில் இருப் 4.1தை உணர்ந்தேன். பின்னர் மரத்தைச் சுற்றி யிருந்த பூங்காவைக் கண்டுகளித்த வண்ணம் புத்தராலயம் வந்தோம்; அந்த ஞானப் பிழம்பை வழிபட்டோம். பிறகு புத்தரின் கொள்கைகளை என் மனைவிக்குக் கூறிக் கொண்டே பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். புத்தர் கண்ட சமயம் பன்னிரண்டு நிதானங்களை யுடையது. நிதானம் என்பது காரணம். இவை பேதைமை, செய்கை, உணர்வு, அருவுருவாயில், ஊறு, நுகர்வு, வேட்கை பற்று, பவம். தோற்றம், வினைப்பயன் என்று கூறுவர் சீத்தலைச்சாத்தனார்." இந்தப் பன்னிரு சார்பு களின் தன்மைகள் மணிமேகலையில் 30-ஆம் காதையில் தெளிவாக விளக்கப் பெறுகின்றன. இச்சார்புகளினால் தான் பிறப்பு-இறப்பு என்ற சக்கரம் சுழல்கின்றது. சார்புகளைச் சிறிது சிறிதாகக் களைந்தால்தான் *நிர்வாண மோட்சம்' எனப்படும் வீடுபேற்றினை அடையலாம்; 5. கருணைக் கடல் 6. மணிமேகலை-24; 105-110: 30:45-50