பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யைச் செலவு 327 சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் கோய்." என்ற பொய்யா மொழியாரின் கருத்தும் இதுவேயாகும். நிர்வாண மோட்சம் அடைவதற்கு நான்கு உயர்ந்த உண்மைகளை அறிதல் வேண்டும். அவை: துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்பன. புத்தர் பெருமான் போதி மரத்தினடியில் மெய்ஞ் ஞானம் பெற்றபொழுது இவற்றை அறிந்தார். இந்த நான்கின் அடிப்படையில்தான் புத்த சமயம் என்ற கட்டடம் நிற்கின்றது. துக்கம் என்பது, நோய்; பிறப்பு துன்பம்; பிணி துன்பம்; மூப்பு துன்பம்; இறப்பு துன்பம்; அன்பில்லாரோடு தொடர்பு துன்பம்: அன்புள்ளாரிடத் தினின்றும் பிரிவு துன்பம்; விரும்பியதைப் பெறாமை துன்பம். சுருங்கக் கூறின், புலன்களால் உண்டாகும் பற்றுகள் யாவும் துன்பம் என்று அறிதலே துக்கம் என்னும் முதல் உண்மையாகும். துக்கத்தோற்றம் என்பது, நோய்த் தோற்றம். பன்னிரு சார்புகளின் தொடர்புதான் பிறப்புக் கும் காரணமாகும். இங்கும் அங்கும் சிறுபான்மையே நிறைவேறுவதற்குரியனவாகிய காம .ே லா ப ங் களோடு சேர்ந்த வேட்கை என்பதே இது; இதுவே பிறப் பினும் வித்து" அவாவென்பு எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவா அப் பிறப்பீனும் வித்து." என்ற வள்ளுவப்பெருமானின் கூற்றும் இதையே குறிக் கின்றது. இன்ப வேட்கையும், அதிகார வேட்கையும் இதுவேயாகும். இஃது இரண்டாவது உண்மையாகும். சாத்தனாரும், . குறள்-359 8. மணிமேகலை-30: 179-182. 9 டிெ 104-117. 10 குறள்-361