பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 88 நினைவுக் குமிழிகள்-4 அந்நோய் தனக்குப் பேதைமை செய்கை அவாவே பற்றுக் கரும ஈட்டம் இவை காரண மாகும்.' என்று கூறுவது ஈண்டுக் கவனிக்கத் தக்கது. துக்க கிவாரணம் என்பது, நோய் நீங்கும் வாய். ஆசைக்குச் சிறிதும் இடம் கொடாமல் அதனை வேருடன் களைந்து நீக்குவதே மூன்றாவது உண்மையாகும். "துன்பம் தோற்றல் பற்றே காரணம்' என்னும் உண்மையை உறுதியாக உணரவதே இதுவாகும். துக்கத்தை நீக்கினால் பிறவாமையாகிய இன்பதை அடையலாம் இதுபற்றி விநயபிடகத்தில்' காணப் பெறுவதைச் சாத்தனார் தெளிவாக மொழி பெயர்த்துக் காட்டுவர் ' துக்க நீக்கநெறி என்பது நோய் நீக்கும் நெறி, 11 மணிமேகலை-30; 183-185 12 ைெடிடிெ-186 13. இது பெளத்த மறைகளுள் ஒன்று. புத்தர் பெருமான் நிர்வாணமோட்சம் அடைந்த சில மாதங் களுக்குப்பிறகு ஐந்நூறு தேரர்கள் வயது முதிர்ந்த பிட்சுக்கள்--கார் காலத்தைக் கழிப்பதற்காக ஒரு மலைக் குகையில் கூடினர். இதுவே பிட்சுக்கள் கூடிய முதல் மாநாடாகும் இது புத்தரின் முக்கிய சீடருள் மகாகாசியர் தலைமையில் நடைபெற்றது. மற்றொரு சீடர்உபாலி என்பார் புத்தர்அருளிய விநயபோதனை களைத் தொகுத்து ஒதினார்: இவை பிட்சுக்களும் பிட்சுணிகளும் ஒழுக வேண்டிய ஒழுக்கங்களைப் பற்றி யவை. இன்னொரு முக்கிய சீடர் ஆனந்தர் புத்தர் அருளிய தம்ம போதனைகளைத் தொகுத்து ஒதினார்;