பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கயைச் செலவு 恕89 'இன்பம் வீடே பற்றிலி காரணம்' என்று கூறுவர் சாத்தனார். நற்சாட்சி, நல்லூற்றம், நல்வாய்மை . நற்செய்கை, நல்வாழ்க்கை, நன் முயற்சி, நற்கடைப்பிடி, நல்லமைதி ஆகிய எட்டுவித ஒழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுவதே நான்காவது உண்மையாகும். இவை "அஷ்டாங்க மார்ககம்' என்றும் வழங்கப்பெறும். இதைத் தான் விசுத்தி மார்க்கம் என்றும், பழுதிலா வாழ்க்கை என்றும் கூறுவர். சங்கமே பெளத்த சமயத்தின் ஆணிவேர் போல் நின்று அச்சமயம் உலகமெங்கும் பரவுவதற்குக் காரணமாக இருந்தது சங்கம்’ என்பது பெளத்த பிட்சுக் களின் கூட்டம், புத்தருடைய தியாகமும் அவர் போதித்த அறிவுரை களும் வெளி நாட்டறிஞர்கள் பலரின் மனத்தைக் கவர்ந்தன. யுவான் சுவாங் முதலிய சீன அறிஞர்கள் புத்தர் பிறந்த புண்ணிய பூமியைத் தரிசிக்க விரும்பி நம் நாடு வந்தனர். புத்தர் போதனைகளைக் கற்றுத் திரும்பினர். நம் நாட்டிலிருந்து புத்த பிட்சுக்களும் வெளி சென்று தம் சமயத்தைப் பரப்பினர். புத்தர் பெருமானின் பெருமை. சீனா, ஜப்பான் பர்மா, சயாம், இலங்கை முதலிய வெளி நாடுகள் வரை சென்று பரவியுள்ளது. இன்றைய உலகில் பெளத்த சமயத்தைப் பின்பற்றும் மக்கள் அறுபது இவை அறநெறிகள் பற்றியவை. இவை முறையே விகயபிடகம், தம்மபிடகம் அல்லது அபிதம்மபிடகம் என்றுபெயர் பெற்றன .பிற்காலத்தில் அபிதம்மபிடகத் திலிருந்து சூத்திரபிடகம் தொகுக்கப்பெற்றது. இவை மூன்றும் திரிபிடகம் என்று வழங்குகிறது. இவை பெளத்த மறைகளாகும். பிடகம் கூடை (பாலி மொழி), தொகுப்பு என்பது கருத்து. 14. மணிமேகலை-39 : (119-133). 15. டிெ 36 :187.