பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 நினைவுக் குமிழிகள்-2 கோடிக்கு மேல் உள்ளனர் என்பதாகக் கணக்கிடப். பெற்றுள்ளது. இவற்றையெல்லாம் கூறிய வண்ணம் இலங்கை, பர்மா, ஜப்பான், சயாம் முதலியநாட்டார்கள் இங்கு வந்து தங்குவதற்கென்று அந்நாட்டவர்களால் கட்டப்பெற்றுள்ள விடுதிகளைப் பார்த்தோம். ஒவ்வொன்றும் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாகக் கட்டப்பெற்றுள்ளன.எல்லாம் நவீன வசதிகள் உள்ள பெரிய பெரிய மாளிகைகளாகும். இவற்றையெல்லாம் பார்த்த பிறகு ஒரு சிறு உணவுவிடுதி யில் பூரி உண்டு சுமார் மாலை மூன்றுக்குத் திரும்பினோம். ஆசிய ஜோதி யாகிய புத்தர்பிரான் தோன்றிய நாட்டை, பூரண ஞானம் பொதிந்தநன் னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே." என்று பாரதியார் போன்றியதை நினைந்த வண்ணம் மாலை 4-3 க்குச்சத்திரம் வந்தடைந்தோம். அடுத்த நாள் காலை பகல் இருப்பூர்தியில் காசி வந்தடைந்தோம். பண்டாரம் இருப்பூர்தி நிலையம் வரையில் வந்து வழியனுப்பினார். سمسمصمميسيسسسسسسسس مستسمم 16. பாக : எங்கள் நாடு-2