பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-196 43. திருப்பதி திரும்புகை தொடக்க காலத்திலேயே அயோத்திப் பயணம், கயைப் பயணம் முடித்துக் கொண்டோம், அடுத்து, காசி யில் உள்ள இடங்களையும், வெளியில் உள்ள இடங்களை யும் பார்ப்பதாகத் திட்டமிட்டிருந்தோம். இவை யெல்லாவற்றையும் பார்த்த பிறகுதான் என் மனைவியின் உடல் நிலை கெட்டது: நச்சுக்காய்ச்சல் கடுமையாகத் தாக்கவில்லை. என்றாலும் இரண்டு இரவுகள் பயணம் இருப்பதால், வழியில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் சமாளிக்க் முடியாது என்றும் நல்ல நிலை ஏற்பட்ட பிறகு தான் திரும்பவேண்டும். என்றும் திரு. வினைதீர்த்தான் செட்டியார்யோசனைப் படித்தங்கிவிட்டோம்.காசிமுதலிய திருத்தலப் பயணங்கள் 25 நாட்களில்முடிந்தன.திடீரென்று ஒரு நாள் பயணத்திற்காக இட ஒதுக்கீட்டுக்காச் சென்றேன். உட்காருவதற்குத்தான் கிடைக்கும் என்றும், படுப்பதற்கு இட்டார்சியில் தில்லியிலிருந்து வரும் இருப்பூர்தியில் முயன்று பெறவேண்டும் என்றும் நிலை ஏற்பட்டது.இறைவன் வழிகாட்டுவான் என்று பயணத்தை உறுதி செய்து கொண்டோம். நாங்கள் சென்ற இருப்பூர்தியிலேயே தேவகோட்டை ஜமீந்தார் திரு, சோமய்யா அவர்கள் (சோமசுந்தரம் செட்டியார் என்று பெயர் இருக்கவேண்டும் என்பது என் ஊகம்) சென்னை வரைப்பயணம் செய்தார்; அவருடன் தேவகோட்டையைச் சார்ந்த சில ஆச்சிமார்களும் பயணம் செய்தார்கள். எல்லோருக்குமே படுக்க இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. வடநாட்டுப் பக்கம் போகிறவர்கள் இட