பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.32 நினைவுக் குமிழிகள்-4 ஒடக்கீடு செய்யாமல் பயணம் செய்யக்கூடாது. மொழி பெயர்தேயத்தில் அம்மொழி தெரியாத நாம் பல தொல்லைகளை அநுபவிக்க நேரிடும். இந்தி மொழியைத் தவிர வேறு மொழி பேச அறியாதவர்கள் வண்டியில் நிறைந்து விட்டால் தொல்லைகள் அதிகமாக இருக்கும். சாமான்கட்கும் பாதுகாப்பு இராது. திரு. சோமய்யா அவர்கள் இருப்பூர்தி நிர்வாகத்தில் பல்லாண்டுகள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருந்தவராதல் அவர் செல்வாக்கைக் கொண்டு இடம் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. எட்டுப்பேர் அடங்கிய எங்கள் குழுவில் நானும் திரு.சோமய்யா அவர்களுமே ஆண்கள்; ஏனைய அறுவரும் பெண்கள். செல்வாக்கு இருந்தாலும் அவரால் எட்டு இடங்கட்கு எப்படி வழி செய்ய முடியும்? என்ற ஐயமும் அச்சமும் என்பால் இருந்தது. துணிவே துணையாக இருந்தோம். திரு. சோமய்யா நகைச்சுவை யாகப் பேசுபவர்; உதவி செய்வதே அவர் இயல்பாக இருந்தது. காரைக்குடியிலிருந்தபோது திரு. ராய. சொ. அவர்களால் நன்கு அறிமுகமானவனாதலால் அவரிடம் நன்றாக அரட்டை அடிக்க முடிந்தது. என்றாலும் செளலப்பியமே உருவெடுத்த அவரிடம் பழகுவது எளிமை யாகவும் இருந்தது. இட்டார்ச்சி வந்ததும், வண்டி மாறினோம்; மாலை நேரமாகி விட்டது . எங்கள் அனைவரின் நல்லூழின் காரணமாகப் பதினைந்து இடங்கள் காலியாக இருந்தன. யாதொரு சிரமமுமின்றி கட்டணம் செலுத்தி இட ஒதுக்கீடுகள் செய்து கொண்டோம்.திரு. சோமய்யா அவர் கட்கும் தொல்லை இல்லை: அவரும் தெய்வாதீனமாக ஏற்பட்ட நிலைமைக்கு மகிழ்ச்சியுற்றார். பயணம் இனிதாக அமைந்தமைக்கு காசி விசுவநாதருக்குத் 1. இந்தப் பெருமகனார். இன்று இல்லை ஏப்பிரல் 1990) பல்லாண்டுகட்கு முன்னரே 'சிவப்பேறு’ எய்தி விட்டார்.