பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதி திரும்புகை 3Ꮽ 3. தான் நன்றி செலுத்த வேண்டும். இறைவன் நினைவுடன் பயணம் செய்தால் எல்லாம் இனிதாகவே முடியும் என்ற உண்மையை என் ஐம்பதாண்டுப் பயண அநுபவத்தில் அறிந்த பேருண்மையாகும் 'கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்ற முதுமொழி பொய்யாகுமா? சரியாக்ப்பகல் பன்னிரண்டு மணிக்கு இருப்பூர்தி கூடுர் நிலையத்தை வந்தடைந்தது. திருப்பதி செல்லும் வண்டி புறப்பட இன்னும் 3:மணி நேரம் இருந்தது. ஆகவே மேல் வகுப்பு பயணிகள் தங்கும் அறையில் பெட்டி படுக்கையை வைத்து விட்டு நானும் என் மனைவியும் ஒருவர்.பின் ஒருவராக நன்றாக நீராடி மூன்று நாட்கள் அழுக்கையும் போக்கிக்கொண்டோம், நிலைய உணவு விடுதியில் உணவு கொண்டோம். இரண்டு நாட்கள் கண்டவற்றைத் தின்ற எங்கட்கு தமிழக உணவு தேவாமிர்தமாக இருந்தது. மூன்றுமணிக்கே வந்து திருப்பதி செல்லும் இருப்பூர்தியில் இடம் பிடித்து ஏறிக்கொண்டோம். வண்டி புறப்படும் போதுகூட கூட்டம் அதிகம் இல்லை. இடையிலுள்ள நிலையங்களில்தான் கூட்டம் ஏறியது: இறங்கியது. மாலை 6.39க்கு வண்டி திருப்பதியை அடைந்தது. முன்னரே கடிதம் எழுதியிருந்தமையால் சிறுவர்கள் இருவரும் நிலையத்திற்கு வந்திருந்தனர். சாமான்களைச் செளகர்ய மாக இறக்கி ஆள் மிதி வண்டியிலேறி வீடு வந்து சேர்ந் தோம். முதுமைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய காசிப் பயணத்தை ஐம்பது அகவைக்குள் முடித்துக் கொண்டது இறைவன் திருவருளாகும்.