பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-200 44. என் டாக்டர் பட்ட ஆய்வு கிறைவு 1968 - ஆம் ஆண்டு இறுதியில் பிஎச்.டிக்குரிய என் ஆய்வை முடித்து விட்டேன். இனி தட்டச்சு செய் வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டியதுதான் , பல்கலைக் கழகத்தில் திரு. பி இராமச்சந்திரா ரெட்டி என்பவரும் (முதல்வர் அலுவலகத்தில் தட்டச்சுப் பணியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்) திரு. கோவிந்தராஜுலு என்பவரும் (பல்கலைக்கழக அலுவலகத்தில் தட்டச்சுப் பணியாளராக இருந்து கொண்டிருந்தவர்) சிறந்த தட்டச்சுப் பணியாளர் என்று புகழ் பெற்றிருந்தவர்கள். முன்னவரிடம் தட்டச்சுப் பொறி இருந்தது. பல ஆய்வுக் கட்டுரைகளைச் சிறந்த முறையில் தட்டச்சு செய்து பெரும் புகழ் பெற்றவர். பின்னவருக்கு இத்தகைய அநுபவம் இல்லை. இருந்தபோதிலும் இவர் பல்கலைக்கழக உடற் பயிற்சி இயக்குநர் திரு. I. K. கோவிந்தராஜுலுவிடம் பணியாளராக இருந்த காலத்தில் (1960-64 என்பது நினைவு) என் அலுவல் காரணமான கடிதங்களைத் தட்டச்சு செய்து தந்து உதவியவராதலால் இவருடைய திறமை, பொலிவான முறையில் செய்த பணி, இத்தனைக் கும் மேலாக இவர்தம் அடக்கமான பண்பு என்னைக் கவர்ந்தன. ஆதலால் அவரைப் பார்த்து, தம்பி, என் கட்டுரையை அடித்துத் தருவாயா? நான் ஒரு புதிய தட்டச்சுப் பொறியை (Type Writer) வாங்கித் தந்து விடுகின்றேன். ரூ 1500/-விலை இருக்கும். நல்ல முறையில் ஒரும்பக் கட்டிய பொறியை (Retail Machine) வேண்டு மானாலும் வாங்கிக் கொள்க. தட்டச்சுக் கூலியே ரூ 1200/- வரும். அதை ஈடு செய்து கொண்டால் பொறி