பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் டாக்டர் பட்ட ஆய்வு நிறைவு 3.35 தினக்கே சொந்தமாகி விடும். இதைக் கொண்டு பலருக்கு உதவலாம்' என்றேன். அவர், 'ஐயா, என் உடல் நிலை கடுமையான உழைப்புக்கு இயைந்து வருவதில்லை. அலுவலகப் பணி நன் முறையில் ஆற்றி நல்ல பெயர் கிடைத்தால் போதும். என்னைவிட திரு. பி இராமச் சந்திராரெட்டி நன்றாக அடிப்பார். பல கட்டுரைகளை நன்முறையில் அடித்துத் தந்து நற்புகழ் ஈட்டியவர். அவரை அணுகி ஆவன செய்து கொள்ளுங்கள். தாங்கள் தரும் பணியைச் செய்ய முடியாத நிலைமைக்கு வருந்து கின்றேன். தவறாக நினைக்காதீர்கள். மன்னித் தருளுங்கள்' என்று சொல்லிவிட்டார். பின்னர் திரு. பி. இராமச்சந்திரா ரெட்டியிடம் தட்டச்சு செய்யுமாறு கேட்டேன், செய்வன திருந்தச் செய்யுமாறு கேட்டேன். 'செய்வன திருந்தச் செய்' என்ற ஒளவைப் பாட்டியின் திருவாக்ச்ைகசிறு வயலிருந்தே கடைப்பிடிப்பவன் நான். இருவரும் கலந்து யோசித்து தட்டச்சு வேலையில் சில நியதிகளைக் கடைப்பிடிப்ப தெனத் தீர்மானித்தோம்; அவை : (1) Gateway Bond தாளைப் பயன்படுத்துவது, (2) மைத்தாளில் (Carbon Paper) pluffsåg, tres360&lo (Black Corbon with plastic back) பயன்படுத்துவது: (3) ஐந்து படிகளுக்கொருமுறை இத்தாளை மாற்றுவது, (4) கறுப்பு வண்ண நாடாவைப் பயன்படுத்துவது: (5) 100 பக்கம் அடிப்பட்டதும் நாடாவை அகற்றுவது (6) மிகக் கவனமாக அடிப்பது: பக்கத்திற்கு இரண்டு பிழைகட்குமேல் வந்து விட்டால் அப்பக்கத்தைத் திரும்ப அடிப்பது' என்பவை. திரு. ரெட்டி மிக அக்கறையுடன் இப்பணியைச் செய்தார். பிழைகளின்றியே இத்திருப்பணியை நிறைவு செய்தார். கட்டுரை நூல்முகம், உள்ளுறை, பின்-இணைப்புகளுடன் 1200 பக்கங்களில் அமைந்தது. இதனை இரண்டு பகுதி களாகக் கட்டமைத்தேன். திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக்கட்டுரை அல்மவதில் பக்கவரம்பு