பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮍ8 $ நினைவுக் குமிழிகள்-4 இல்லையாதலால் கட்டுரை வளர்வதைத் தடுக்காமல் விட் டேன். வைணவத்திற்கு ஒரு மூலமுதல் நூலாக (Source: Book) இருக்க வேண்டுமென்றே தொடக்கத்தில் திட்ட மிட்டேன். எம்பெருமான் திருவுள்ளப்படிக் கட்டுரை நன்கு அமைந்தது. கட்டு ைர ஆங்கிலத்தில் தான் எழுதினேன். ஒரு ரீம். நல்லவழுவழுப்பான தாளை ஃபூல்ஸ்கேப்அளவில் வெட்டிக் கொண்டு அதில் ஆறில் ஒரு பங்கு கீழே விட்டுச் சிவப்புக் கோடு போட்டுக் கொண்டேன். இந்த இடம் அடிக்குறிப் காக ஒதுக்கப்பெற்ற இடம். நான் எழுதும்போது பெரும் பாலும் அடிக்குறிப்புகள் இல்லாத பக்கமே இராது. முத்துக்கோத்தாற் போல் அழகாக எழுதுவேன். ஆங்கிலத் தில் எழுதுவதால் பல பக்கங்கள் அடித்தலும் திருத்தலு: மாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட இயல் நன்கு எழுதி முடிந்து சரிபார்க்கப் பெற்றதும் அந்த இயலில் அடித்தலும் திருத்தலுமாக உள்ள பக்கங்களை மீண்டும் அழகாக எழுதுவேன். அந்த இயலின் அடிக்குறிப்பிற்குத்தொடர்ந்து வரிசையாக எண்களை இடுவேன். இம் மாதிரியே எல்லா இயல்களையும் நிறைவு செய்வேன். 32 இயல்கள் அமைந்த கட்டுரையை ஆறு பகுதிகளாக அமைத்து ஒழுங்குபடுத்தி னேன். ஆய்வுக் கட்டுரையைத் தொடர்ச்சியாக ஒழுங்கு படுத்த முடிவதில்லை. கட்டுரைக் கருத்து நிரல் நிரையாக மனத்தில் ஒழுங்குப்படுத்தப் பெற். நிருக்குமாதலால் ஏறக்குறைய நன்கு அமைந்த இயல்கள் சரிபார்க்கப்பெற்று தட்டச்சுப் பொறி யாளரிடம் தரப்பெறும். அவர் அவற்றை முதல் நாளிரவு அமைதியாகப் படித்து ஐயப்படும் சொற்களின் எழுத்துகள் சரியாகப் புரியாதவற்றை எழுது கோலால் குறித்துக் கொண்டு வருவார். அடுத்த நாள் அவருக்கு. எழுந்த ஐயங்களைப் போக்குவேன். அதன் பிறகே அவர் அடித்துத் தருவார். நாடோறும் படித்துப் பக்கங்கட்குக்