பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் டாக்டர் பட்ட ஆய்வு நிறைவு § 37 குறையாமல் தருவார்; விடுமுறை நாட்கள் வருங்கால் இருபது பக்கங்கட்கு மேலும் தருவார். நான் தமிழ்த்துறையில் ஒரேர் உழவன். அடித்த வற்றைக் கையெழுத்துப்படியுடன் ஒப்பிட்டுப் படிப்பதில் துணைசெய்வதற்கு ஒருவரும் இல்லை. பட்டப் படிப்பில் படித்து வந்த என் மூத்த மகன், பத்தாம் வகுப்பில் நடுவண் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்த என் இளைய மகன் இவர்களை அவர்கட்கு ஓய்வு இருக்கும்போது பயன்படுத்திக் கொண்டு ஐந்தாவது படியில் திருத்தம் செய்து கொள்வேன். இரண்டு பிழைகட்கு மேல் உள்ள பக்கங்களைத் திரும்பவும் ஐந்துபடிகள் அவ்வப்போது அடிக்கச் செய்துவிடுவேன்: அவற்றை உடனுக்குடன் சரி பார்த்துவிடுவேன். ஏனைய நான்கு படிகளையும் திருத்தம் பெற்ற ஐந்தாம் படியுடன் ஒப்பிட்டுத் திருத்தங்கள் இருப்பின் செய்து கொள்வேன். பெரும்பாலும் திருத்தங் களே இருப்பதில்லை. இயல்களைப் பகுதியாக அமைத்த பிறகு அந்தப் பகுதியில் அடங்கிய இயல்களின் சுருக்கத்தை ஒரு சில பக்கங்களில் எழுதுவேன். சரி பார்த்த பிறகு தட்டச்சு செய்வதற்குத் தருவேன். இவற்றையும் சரீ பார்த்து உரிய இடங்களில் அமைத்துவிடுவேன். கைப்படி தட்டச்சுக்குப் போவதற்கு முன்னர் என் அரிய நண்பர் திரு. எஸ். விசுவநாதன் (விரிவுரையாளர், ஆங்கிலத்துறை) ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்துத் திருத்தம் செய்து விடுவார்; நானும் இவற்றை நன்கு பார்த்து திருத்தங்களை அறிந்து கொள்வேன் இந்த ஆய்வுக் கட்டுரையில் ஆழ்வார் பாசுரங்கள் அல்லது பாசுரப்பகுதிகள் மேற்கோள்களாகவும் சான்று களாகவும் காட்டப் பெறவேண்டி வரும். இவற்றைப் 1. இப்போது இவர் டாக்டர். எஸ். விசுவநாதன். ஐதரபாத்தில் நேரு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துணைப்பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். தி-22