பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 8 நினைவுக் குமிழிகள்.4 பாசுர எண்களுடன் தமிழாக்கத்திற்காக இடம் விட்டு எழுதிக் கொள்வேன். பெரும்பாலும் தமிழாக்கத்தை தானே செய்து கொண்டு திரு. விசுவநாதன் அவர்களிடம் திருத்தம் செய்து கொள்வேன். இடர்ப்பாடாக இருப்ப வற்றிற்குத் திரு.விசுவநாதனே தமிழாக்கம் தருவார். இவற்றையெல்லாம் தயாராக வைத்துக் கொண்டுதான் கட்டுரையை எழுதத் தொடங்குவேன். தமிழாக்கங்களை உரிய இடங்களில் பயன்படுத்திய பிறகு பயன்படுத்தப் பெற்றவற்றை அடையாளம் செய்து விடுவேன். ஒரிடத்தில் வந்தவை திரும்பவும் பிறிதோரிடத்தில் வாரா திருப்பதற்கு இந்த அடையாளம் உதவும். ஒத்த கருத்துகள் பல இருக்குமாதலால் பயன்படுத்தியவை போக எஞ்சியவை வேறு இடங்களில் தேவையிருந்தால் பயன்படுத்தப்பெறும், ஆய்வுக் கட்டுரை எழுதுவோர் எத்தனையோ முறைகளை முன் யோசனை செய்து வைத்துக் கொள்ள வேண்டும் . பயன்பட்ட நூல்கள், பயன்படும் என்று கருதி பார்த்த நூல்கள் இவற்றை எழுதிய ஆசிரியர், வெளியீட்டாளர், பதிப்பு முதலிய குறிப்புகளுடன் அவ்வப் பொழுது ஒரு தனிக்குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படியே அகராதிகள் கலைக் களஞ்சியங்கள், வார மாத, வெளியீடுகள் இவற்றின் விவரங்களையும் அவ்வப்போது குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னிணைப்புகளைத் தயார் செய்யும்போது இவற்றைத் தக்க முறையில் பாகுபாடு செய்து அகரவரிசையில் நிரல்பட அமைக்க வேண்டும் இவற்றையும் ஒருமுறைக்கிருமுறை சரிபார்த்த பிறகே தட்டச்சுக்கு அனுப்பவேண்டும். இதற்கெல்லாம் அதிகக் காலம் ஆகும். எவர் உதவியுமின்றி நானே இவற்றைச் செய்தால்தான் எனக்கு மனநிறைவு ஏற்படுமாதலால் பிறர் உதவியை நாடேன். எல்லாவற்றையும் தட்டச்சு செய்த பிறகு ஐந்து கோப்புகளை வைத்துக் கொண்டு முதல், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து படிகளை