பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் டாக்டர் பட்ட ஆய்வு நிறைவு さ; ?登 மாறாமல் கோப்புகளில் அமைப்பேன். முதற்படியுடன், இரண்டாவது படியோ, இப்படி ஒன்றுடன் பிற கலக்காதிருக்க விழிப்புடன் இருத்தல் வேண்டும். இவ்வாறு வரிசைப்படுத்தி அடுக்கியபிறகு எல்லாப் படிகளையும் மீண்டும் ஒருமுறை ஐந்தாம் படியுடன் ஒப்பு நோக்கி எல்லாவற்றிலும் திருத்தங்கள் செய்யப் பெற்றுள்ளனவா என்பதைச் சோதித்துச் சரிபார்த்த பிறகு மீண்டும் ஒருமுறை ஐந்து படிகளையும் சரிபார்க்க வேண்டும். பக்கங்களின் எண்போடாது தட்டச்சு செய்யப் பெற்றவை யாதலால் சரிபார்ப்பதற்கு அடிக்குறிப்புகளின் எண்கள் துணையாக இருக்கும். இவ்வாறு செய்தபிறகு எண் பொறியால் ஐந்து படிகளிலும் எண்கள் போட வேண்டும்; கட்டமைப்பாளர் இதைச் செய்வார். திரு. கண்ணன் என்ற பெயர் கொண்ட கட்டமைப் பாளர் ஒருவர் திருப்பதியில் இருந்தார். இவர் பல்கலைக் கழக நூலகத்திற்குப் பழைய நூல்களைக் கட்டமைத்துத் தருபவர். பலிஜ வகுப்பைச் சேர்ந்தவர். துணைவேந்தர் கோவிந்தராஜுலு நாயுடு காலத்திலிருந்தே நூலகத்திற்குக் கட்டமைப்பு செய்து தரும் பணியை மேற்கொண் டிருந்தார். நான் துறையூரில் பணியாற்றிய காலத்திலேயே {1941-50) இவர் அவ்வூரிலுள்ள ஜனோபகார அச்சகத் தில் பணிபுரிந்தவர். நான் காரைக்குடிக்குப் போன காலத்திலேயே இவரும் திருப்பதிப் பக்கம் வந்துசேர்ந்து விட்டதாகச் சொன்னார். நான் திருப்பதி சென்ற சில நாட்களில் தற்செயலாக இவரை எங்கோ சந்திக்க நேர்ந்தது. நான் துறையூரிலிருந்தபோது இவரிடம் நெருங்கிப் பழகி வந்தேன். சில நூல்களையும் கட் டமைத்துக் கொண்டேன். என்னுடைய ஆய்வுக் கட்டுரையை இவரிடம் நல்ல முறையில் கட்டமைத்துக் கொண்டேன். கட்டுரையின் ஐந்துபடிகளும் பத்துக் கட்டமைப்புப் பகுதிகளாக அமைந்தன. ஐந்துபடிகளில் ஒரு படியை மட்டிலும் வைத்துக் கொண்டு 4படிகளை ஒரு