பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 நினைவுக் குமிழிகள்-; நல்ல நாளில் உரிய கட்டணத்துடன் பல்கலைக் கழகத்தில் சேர்த்தேன் (செப்டம்பர் 1968). இதன் முடிவு எம்பெருமான் ஏழுமலையான் கையிலுள்ளது என்ற அமைதி கொண்டுவாளா இருந்து விட்டேன். ஐந்தாண்டு கள் உழைத்த பயன் ஆறு திங்களுக்குள்ளாவது தெரிவிக்கப் பெற்றால் ஆய்வாளருக்குப் பேருதவியாக இருக்கும். குமிழி-29 : 45. ஆய்வுக் கட்டுரையின் தேர்வு முறைகள் ஆய்வுக் கட்டுரையைப் பல்கலைக் கழகத்திற்குத் தருவதற்கு (4 படிகள்) மூன்று மாதத்திற்கு முன்னர் ஆய்வாளர் தம்முடைய கட்டுரையைப் பற்றிய விரிவான குறிப்பை (4 படிகள்) பல்கலைக் கழகத்திற்குத் தருதல் வேண்டும். இச்சமயத்தில் நெறியாளர் அறுவர் பெயர் களை முகவரியுடன் பல்கலைக் கழகத்திற்குத் தருதல் வேண்டும். பல்கலைக் கழகமும் கட்டுரை எந்தப் புலனுக் குரியதோ (Faculty) அந்தப் புலனுக்குரிய பாடத் திட்டக் குழுவின் (Board of Studies) தலைவருக்கு எழுதி அறுவர் பெயர்களை முகவரியுடன் தருமாறு கேட்டு எழுதிப் பெறும். சில பல்கலைக் கழகங்களில் இவ்விருவரும் தனித்தனியாகப் பன்னிரண்டு பெயர்களைத் தரவேண்டும் என்ற நியதியையும் பின்பற்றுகின்றனர். இந்தப் பன்னிரண்டு பெயர்களில் (அல்லது இருபத்தி நான்கு. பெயர்களில்) து ைண வே ந் த ர் மூவரைத் தேர்ந்: தெடுப்பார். இவர்களில் ஒருவர் தேர்வாளர் குழுவிற்குத் தலைவராக இருப்பார். பல்கலைக் கழகத் தேர்வு அதிகாரி இம்மூவருக்கும் கட்டுரைக் குறிப்பை அனுப்பி இக்குறிப்பிற்.