பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுக் கட்டுரையின் தேர்வு முறைகள் 34 f குரிய ஆய்வுக் கட்டுரையை மதிப்பீடு செய்தல் முடியுமா? அப்படிச் செய்வதற்கு ஒப்புக் கொண்டால் (இரண்டு திங்களுக்குள் அல்லது ஆறு வாரத்திற்குள்) ஆய்வுக் கட்டுரை பற்றிய அறிக்கையைத் தர முடியுமா? என்று கேட்டு எழுதி ஒப்புதல்களைப் பெற்றுத் தயாராக வைத்துக் கொண்டிருப்பார். ஆய்வாளரிடமிருந்து கட்டுரைப் படிகள் நான் கைப் பல்கலைக் கழகம் பெற்றதும் ஒரு படியைப் பல்கலைக் கழகம் தம்மிடம் இருத்திக் கொண்டு, மூன்று படிகளைத் தேர்ந்தெடுக்கப்பெற்ற மதிப்பீட்டாளர்கள் மூவருக்கும் அனுப்பி வைக்கும். இந்த மூவரில் மதிப்பீட்டாளர் இருவர் தம் மதிப்பீட்டு அறிக்கைகளைக் குழுத்தலைவருக்கு அனுப்பித் தாம் அனுப்பிய செய்தியைப் பல்கலைக் கழகத்திற்கும் தெரியப்படுத்துதல் வேண்டும். மதிப்பீட்டுக் குழுத்தலைவர் இரண்டு வாரத்திற்குள் தம் அறிக்கையுடன் ஏனைய இருவர் அறிக்கைகளைப் பார்த்து ஆய்ந்து தலைவர் அறிக்கையையும் மற்ற இருவர் அறிக்கைகளையும் சேர்த்துப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்புதல் வேண்டும். மூவர் அறிக்கைகளும் ஒரு மனத்துடன் உடன்பாடு தெரிவித்தால் ஆய்வாளரின் ஆய்வைப் பல்கலைக் கழகம் ஒப்புக் கொண்டு வாய்மொழித் தேர்வுக்கு வகை செய்யும். வாய்மொழித் தேர்வில் மதிப்பீட்டுக் குழுத் தலைவரும் நெறியாளரும் (Research Guide) குழுவாக அமைந்து ஆய்வாளரைத் தேர்வுக்கு உட்படுத்துவர். கட்டுரையில் ஐயத்திற்குரிய செய்திகளையும். மேற்கொண்ட நெறி முறைகளையும் வேறு பல ஆய்வு முடிவுகளையும் பற்றி வினவுவர். ஆய்வாளர் நல்ல முறையில் அவற்றிற்கு விடை இறுத்து குழுவின் பாராட்டுதலைப் பெறுவர். குழு மன நிறைவு பெற்றால் ஆய்வாளருக்குப் பட்டம் வழங்கலாம் என்று பரிந்துரை செய்யும், இந்தப் பரிந்துரையைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு (Syndicate) ஒப்புக் கொண்டு ஆய்வாளருக்குப் பட்டம் வழங்கலாம் என்று