பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 நினைவுக் குமிழிகள்-A, முடிவு செய்யும்; விரைவில் பட்டமும் வழங்கப் பெறும். நடைமுறையில் இவையனைத்தும் தீவிரமான மறை: யாகவே இருக்கும். ஆய்வாளரோ, நெறியாளரோ ஒரு குறிப்பிட்ட ஆய்வுக் கட்டுரைக்கு மதிப்பீட்டாளர்கள் யாவர்? குழுத்தலைவர் யாவர்? என்பவற்றைக் கண்டு கொள்ள முடியாது. விதிகள் யாவும் நன்முறையில் வகுக்கப் பெற்றுள்ளன. ஆனால் இவற்றைச் செயற்படுத்தும் அனைவரும் தூய்மை யான உள்ளத்துடனும், விருப்பு வெறுப்புமற்ற முறையி: லும்,காலவரம்புகளை மீறாமலும், ஆய்வாளருக்குத் தம்முடைய கால தாமதமான செயலால் தொல்லை. ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடனும் செயற். பட்டால் நலம். இதில் யாரோ ஒருவர் காலதாமதத்துடன் செயற்பட்டால், ஆட்சி இயந்திரம் சரிவர இயங்காது. போய்விடும். நடைமுறையில் 100க்கு 80 விழுக்காடு சரி. யாக நடைபெறவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். எந்தப் பல்கலைக் கழகமும் இதற்கு விதிவிலக்கு இல்லை. பெரும்பாலானவற்றில் மதிப்பீட்டாளர்களைப் பல்கலைக் கழகம் (அதாவது தேர்வுத்துறையிலுள்ள தேர்வு அதிகாரி): உரிய காலத்தில் அணுகுவதில்லை; மதிப்பீட்டாளர்களும் உடனுக்குடன் தம் ஒப்புதலைத் தெரிவிப்பதில்லை. அப்படி ஒப்புதல் தெரிவித்தாலும், காலா காலத்தில் கட்டுரையின் படி அவர்கள் கைக்குக் கிட்டுவதில்லை. அப்படிக் கிட்டி னாலும் யாரோ ஒருவர் ஆண்டுக் கணக்கில் கூட தேர்வு அறிக்கையைக் குழுத் தலைவருக்கு அனுப்பாத நிலையும் ஏற்படுத்துவதுண்டு. இந்தக் கால தாமதத்தால் பாதிக்கப் பேறுபவர் ஆய்வாளரே. அவர் இளைஞராக இருந்து வேலைக்கு முயல்பவராக இருந்தால், அதில் முயலமுடியாத நிலை ஏற்படலாம். ஏதோ ஒரு பதவியிலிருப்பவர்கள் மேல் பதவிக்கு முயலுவதில் தாமதம் தடைக்கல்லாக அமைந்து: விடுவதும் உண்டு.சில சமயம் ஆய்வாளரே உரிய காலத்தில் கட்டுரையை தரமுடியாததாலும் நெறியாளர் சரியாகப்