பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்வுக் கட்டுரையின் தேர்வு முறைகள் 343 பாராது தாமதப்படுத்துவதாலும் தடை நேரிடுகின்றது. நெறியாளர் தாமதப்படுத்தினால் தட்டச்சுக்கே கட்டுரை போகாத நிலை ஏற்பட்டுவிடும். இவையெல்லாவற்றையும் விட சிலருடைய விடயங்களில் மறையே காக்கப் பெறுவ தில்லை. இதனால் மதிப்பீட்டாளர்கள் தர்மசங்கடத்துக் குள்ளாகின்றனர்; மனச் சான்றுக்குக் குந்தகம் வராமல் செயற்பட முடியாத நிலையும் ஏற்பட்டுவிடுகின்றது. ஒரு சமயம் தமிழகத்திலுள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நான் மதிப்பீட்டாளர் குழுவிற்குத் தலைவராக இருக்க நேர்ந்தது. கட்டுரையோ ஒரு பெரிய கல்லூரியில் பணியாற்றும் துணைப் பேராசிரியருடையது. இந்தக் குழுவில் டில்லியிலுள்ள ஒரு பேராசிரியர் மதிப்பீட்டாளர். அவர் கைக்குக் கட்டுரை கிடைப்பதற்கு முன்னரே அரசியலில் உயர் மட்டத்திலுள்ள ஒருவரின் பரிந்துரைக் கடிதம் கிடைத்ததற்கு மிகவும் மனம் வருந்தி "தமிழகம் தாழ்ந்து போய்க் கொண்டுள்ளது' என்று எழுதியிருந்தது என் நினைவிற்கு வருகின்றது. என் கட்டுரை யார் யாருக்கு மதிப்பீட்டிற்குப்போ யுள்ளது என்பதை அறிந்து கொள்ள முயலவில்லை. தாமதமின்றி அனுப்பப் பெற்று விட்டது என்பது மட்டிலும் தெரிந்தது. தமிழகத்தில் அப்போது (1969) ஒரு சிலரே டாக்டர் பட்டம் பெற்றிருந்தனர் என்பதால் யார் யார் மதிப்பீடு செய்கின்றனர் என்பதை ஊகித்து அறிய முடிந்தது; ஊகம் ஐயமேயன்றித் தெளிவு அல்ல. விரைந்து முடிவு தெரிந்தால் அது எனக்குப் பயனுள்ளதாக அமையும். துணைவேந்தா டாக்டர் W. C. வாமன்ராவ் பதவி முடிய இன்னும் ஆறுமாதங்கள்தாம் உள்ளது. அதற்குள் முடிவு தெரிந்து பட்டமும் பெறவேண்டும் என்ற கவலை தோன்றத் தொடங்கியது. நான் பட்டம் வாங்கிவிட்டால் தம் பதவிக் காலத்தில் துணைப்பேராசிரியராக்கிவிடுவதாக ஐந்தாண்டுகட்குமுன் சொன்னது அன்றும் என் மனத்தில் பசுமையாகவே இருந்து கொண்டிருந்தது. அகவை 52-லும்