பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 நினைவுக் குமிழிகள்-4 நான் விரிவுரையாளராகவே இருந்தது மிக வருத்தத்தை விளைவித்துக் கொண்டிருந்தது. நான் திருப்பதி சென்ற பொழுது சில துறைகளில் ஆய்வு மாணாக்கர்களாக இருந்த வர்கள் கூட துணைப் பேராசிரியர்களாகி விட்டனர் என்பதை அறியும்போது இந்த வருத்தம் மிகுதிப் பட்டது. என் செய்வது? என் ஊழ் இப்படி. எவ்வுயிரும் காக்கவோர் ஈசனுண்டோ இல்லையோ அவ்வுயிரில் நாம்ஒருவர் அல்லவோ-வவ்விப் பொருகுவது நெஞ்சே புழுங்குவதும் வேண்டா வருகுவதும் தானே வரும்.' என்ற வாக்கை நினைத்து கொண்டு வாளா இருந்து விடுவேன். தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே." என்ற அப்பர் பெருமானின் அருள்வாக்கும் ஒளிவிட்டுக் காட்டி என்னை அமைதிப் படுத்தும் . 1. சிவபோக சாரம்-78 2. தேவாரம். 5. 19 : 19 (திருக்கடம்பூர்)