பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-202 46. கைக்குஎட்டியது வாய்க்குஎட்டவில்லை ஆய்வுக் கட்டுரையின் முடிவு விரைவில் தெரிய வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்த்திருந்த எனக்கு ஒரு சோதனைக் காலம் ஏற்பட்டது. இதுவே டாக்டர் W. C. வாமன்ராவ் காலத்தில் துணைப்பேராசிரியர் பதவி கிடைக்காததற்கும் காரணமாயிற்று. மதிப்பீட்டாளர் களில் ஒருவர், கட்டுரை நீளமாக உள்ளது. 250-30 ே பக்கங்களில் சுருக்கி எழுதித் திரும்பச் சமர்ப்பிக்கச் செய் தால் தலம்' என்று பல்கலைக் கழகத்திற்கு எழுதிவிட்டார். இதை ஒர் அறிக்கையாக அனுப்பாமல் பரிந்துரைபோல் கடிதம் எழுதினார். எனக்கு விரைவில் டாக்டர் பட்டம் வரவேண்டும் என்று பல்கலைக் கழக அலுவலகத்தில் விழைந்தவர்கள் பலர். அவர்கள் யாவரும் நான் பதிவு செய்து கொள்வதற்கு எழுதிய பல கடிதங்கள். துணைவேந்தர் கோவிந்தராஜுலு நாயுடுவிடம் "சடுகுடு’ விளையாடி இசைவு பெற்ற விவரங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்கள். முதுமைக் காலத்திலாவது யாதொரு தடையுமின்றி விரைவில் டாக்டர் பட்டம் பெறவேண்டும் என்று துடித்து நின்றவர்கள். தேர்வுத்துறையில் இங்ங்ணம் விழைந்தவர்கள் பலர் என்றாலும் திரு. கங்கைய்ய நாயுடு என்பவர் (ஒரு பகுதி மேற்பார்வையாளர்,-(Section, Superintendent) குறிப்பிடத் தக்கவர். அவர் மதிப் பீட்டாளரின் கடிதத்தைக் கண்டு வெகுண்டு, 'இந்த மதிப்பீட்டாளரை நீக்கி வேறு ஒருவரை அந்த இடத்தில் நியமிக்க வேண்டும். கட்டுரையைத் திருப்பி அனுப்புமாறு எழுத வேண்டும். கட்டுரையின் பக்க வரையறையைப் பல்கலைக் கழகம் சொல்ல வேண்டுமேயன்றி மதிப்