பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நினைவுக் குமிழிகள்- 4 எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்’ என்ற மறைமொழியை என் மனத்தில் இறுத்திக் கொண்டு ஜூலை 31 தேதியன்று (1960) காரை மாநகரி லிருந்து புறப்பட்டேன், எத்தனை நாட்கள் அன்பு மனைவியையும் அருமைச் செல்வர்களையும் பிரிந்து வாழ. வேண்டிவருமோ என்ற ஏக்கம் தொடர்ந்து என் மனத்தில் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருந்தது. நாடு விடுதலை பெறவேண்டுமென்று போராடிய தேசபக்தர்களின் வரலாறுகள் என்மனக் கண்முன் தோன்றின. பிழைப்பின் நிமித்தமோ அல்லது ஊதியத்தின் பொருட்டோ நான் திருப்பதி செல்லவில்லை என்பதை அந்த வேங்கடம் மேவிய விளக்கு தான் அறியும்; திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் எப்படியும் தமிழ்த் துறையை எம். ஏ, பிஎச்.டி முதலிய பட்டங்களைப் பெற ஒரு வாய்ப்புக் களனாக்க வேண்டும் என்ற மன உறுதியும் கொண்டேன். மெய்வருத்தம் பாரார்; பசிநோக்கார்: கண்துஞ்சார்; எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்: செவ்வி அருமையும் பாரார்: அவமதிப்பும் கொள்ளார்: கருமமே கண்ணாயி னார்.”* என்ற குமரகுருபர அடிகளின் வாக்கை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்ற உறுதியும் கொண்டேன். இதில் மெய்வருத்தம்', 'பசி எவ்வெவர் தீமை", செவ்வி அருமை", "அவமதிப்பு', 'கருமம்' என்ற مهم مماسبیبیسی 2. குறள்-666 3. நீதிந்ெறி விளக்கம்-52