பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 நினைவுக் குமிழிகள்.4 பீட்டாளர் அல்லர்' என்று தேர்வு அதிகாரிக்கு. (Controller) ஒரு குறிப்பு வைத்தாராம். அப்போது தேர்வு அதிகாரியாகப் பணியாற்றியவர் திரு. எம். குடும்பராவ், என்பவர். அவர் இந்தக் குறிப்பின் வேகத்தைக் குறைத்து, "எங்கள் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக் கட்டுரைக்குப் பக்க வரையறை இல்லை. ஆதலால் இருக்கிறபடியே மதிப்பீடு செய்து ஒரு திங்களுக்குள் அறிக்கை அனுப்புங்' கள்' என்று அந்த மதிப்பீட்டாளருக்குக் கடிதம் அனுப்பச் செய்தாராம். பிப்பிரவரி-மார்ச்சு (1969)க்குள் அறிக்கை கள் பல்கலைக் கழகம் வந்து சேர்த்துவிட்டன என்றும், குழுத் தலைவர் வாய்மொழித் தேர்வு தேவை இல்லை. என்று எழுதிவிட்டதாகவும் பின்னர் தெரியவந்தது இதனை முன்னரே உசாவி யறிந்து மேற்படி அறிக்கைகளை ஏப்பிரல் மாதம் நடைபெற்ற ஆட்சிக்குழு (Syndicate): கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கச் செய்திருக்கலாம். இத்திசையில் முயலவில்லை. இந்தக் கூட்டம் அனந்தப் பூரில் நடைபெற்றதென்றும், அந்தக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் சேரவில்லை என்றும் பின்னர்தான் தெரியவந்தது. அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா' எண்ணி ஒருகருமம் யார்க்கும்செய் யொண்ணாது புண்ணியம் வந்தெய்து போதுஅல்லால்." என்ற ஒளவைப் பாட்டியின் வாக்குகள் என் மனத்தில் எழுந்து அமைதியைத் தந்தன. கைக்கு எட்டியது. வாய்க்கு எட்டாது போனது என் வினைப் பயன் என்பது: தெளிவாயிற்று. துணைவேந்தரையும் யான் சந்தித்துப் பேச முடியவில்லை; ஏதேதோ நிகழ்ச்சிகள் தோன்றித் தடைகளாக நின்று தடுத்தன. துணைவேந்தரும் கோடை விடுமுறையில் திருப்பதியில் தங்கவில்லை; ஏப்பிரல் 1. வாக்குண்டாம்-5 2. நல்வழி-4