பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை 34.7" இறுதியில் ஐதரபாத் சென்றவர் திரும்பவில்லை. இவர் பதவிக் காலமும் ஜூனில் நிறைவு பெற்றது. பொறுப்பைத் தந்து விடுதலை பெறவும் திருப்பதி வரவில்லை. தொலைபேசி மூலம் பொறுப்பைக் கழற்றிக் கொண்டு விட்டார்! பிரிவுபசாரத் தேநீர் விருந்திற்குச் சிலர் எழுதியும் நன்றியுடன் அதனை மறுத்துவிட்டார். இதற்கிடையில் பாண்டிச்சேரி ஜவகர்லால் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்து தொடக்கம் முதல் அதன் வளர்ச்சிக்கும் புகழுக்கும் காரணமாக இயங்கிய டாக்டர் டி. ஜகந்நாத ரெட்டி துணை வேந்தராக நியமிக்கப் பெற்ற அறிவிப்பும் வந்தது. ஆனால் அவர் வந்து பணியை ஒப்புக் கொள்வதற்கு மூன்று மாதம் தாமதம் ஏற்பட்டது. தாமதத்திற்குக் காரணம் ஒரு புதிராகவே இருந்தது. பலர் பலவாறு பேசிக் கொண்டனர். அப்போது பாண்டிச்சேரியில் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் எஸ். மகராசன் பின்னர் சென்னைக்கு சில ஆண்டுகள் கழித்து வந்த பிறகு பேச்சு வாக்கில் ஒரு காரணம் சொன்னார். அதுவே சரி என்று என் மனத்திற்குப் பட்டது. அது டாக்டர் D. ஜகந்நாத ரெட்டியின் சொரூபத்தின் ஒரு பகுதியை விளக்குவதாக அமைந்தது. அதனை இங்குக் கூறப் போவதில்லை; வேறு எங்கும் கூறப் போவதில்லை.