பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-203 47. மறக்க முடியாத நிகழ்ச்சிகள் துணைவேந்தர் டாக்டர் W. C. வாமன் ராவ் ஒரு பச்சைத் தமிழர்; முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். இவரது தாயகம் வேலூர். சுமார் 150 ஆண்டுகட்கு முன்னர் இவரது பாட்டனார் ஐதரபாத் சமஸ்தானத்தில் பணியேற்று ஐதரபாத்தில் குடியேறினவர். இவர் தந்தையார் காலம், இவர் காலம் ஐதரபாத்திலே கழிந்தன. தாய்மொழியை மறந்து கீழ் வகுப்புகளிலிருந்தே உருது மொழியைத் தாய்மொழியாகப் பயின்றவர். உருதுச் சூழ்நிலையில் பணியாற்றியவர். வங்காளப் பெண்மணியை மணந்தவர். இவர்கட்கு ஒரே ஒரு மகள் தான் உண்டு. அந்தப் பெண்ணும் ஐதரபாத்தில் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் திருப்பதி வரவில்லை. ஒரு ஐந்தாண்டுக் காலத்தில் வேங்கடவனின் தரிசனத்திற்குக்கூடத் தாயும் சேயும் திருப்பதிக்கு வரவே இல்லை. டாக்டர் வாமன்ராவ் தனிமையிலேயே திருப்பதியில் வாழ்ந்தார். ஒரு தமிழர், உருது பயின்றவர், வங்காளப் பெண்ணை மணந்து கோண்டு வாழ்க்கை நடத்தியவர்-இவரிடம் மொழி வெறி, சாதி வெறி போன்ற வேண்டாத பண்புகளை இம்மியளவும் காண முடியாது: பரந்த நோக்கமுடைய வராகத் (Cosmopolitan) திகழ்ந்தார். இவர் ஆட்சிக் காலத்தில் நடந்த சில நிகழ்ச்சிகள் மறக்க முடியாதவை யாக இன்றும் (ஏப்பிரல் 1990) பசுமையாக என் மனத்தில் இ.Tெவின. (1) இவர் காலத்தில் டாக்டர் M. இராதா கிருஷ்ணன் (திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்,