பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத நிகழ்ச்சிகள் 349 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர்) தற்காலிக விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவருக்குப் பிறகு வேறு சில தெலுங்கர்களும் தற்காலிகப் பதவியில் இதே துறையில் அமர்ந்தனர். ஈராண்டுகட்குப் பின்னர் ஆறு விரிவுரையாளர் பதவிகளை நிரந்தரமாக்கும் கட்டம் வந்தது. விளம்பரம் செய்தனர். புதிதாகவும் விண்ணப்பங் களும் வந்தன. ஒரு குறிப்பிட்ட நாளில் தேர்வுக் குழு அமைக்கப் பெற்று அறுவரைத் தேர்ந்தெடுத்தனர். இவர்களில் சிலர் தற்காலிகமாகப் பணியாற்றியவர்களும் இருந்தனர்; புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களும் இருந்தனர். மூத்தவர் பட்டியல் (Seniority list) தேர்த் தெடுத்ததில் யார் பெயர் முதலில் இடம் பெற வேண்டும் என்ற ஆராய்ச்சி எழுந்தது. குழுவில் பெரும்பாலோர் ஆந்திரர்கள்: யாவரும் டாக்டர் இராதாகிருஷ்ணன் முதலிடம் பெறக் கூடாது என்று விரும்பினர். தமிழர் என்ற ஒரு காரணத்தைத் தவிர திறமைக்குக் குறை வில்லை. ஒத்துப் போகும் பண்புடையவர். இந்த அறுவரில் முதலில் பணியேற்றவர். தமிழருக்கு இடம் இல்லை என்று நீங்கள் கருதினால் முன்னமேயே இவரை நுழைய விட்டிருத்தல் கூடாது: நுழைந்து விட்டார். நானும் தமிழன்தான்; இந்த நிலையில் அவருக்கு முதலிடம் மறுப்பது நியாயம் இல்லை' என்று கூறி குழுவைத் தன் பக்கமாக அணைத்துக் கொண்டு பட்டியலில் இவருக்கு முதல் இடம் அளித்தார் துணைவேந்தர். (2) ஒரு சமயம் நான் அவர் திருமாளிகையில் உரையாடிக் கொண்டிருந்தபோது பேச்சு வாக்கில் என் காலத்தில் ஒரு முதலியாரைக் கூட நுழைய வாய்ப்பு அளிக்கமாட்டேன்' என்று கூறினார். ஏன்?’’ என்றேன். சாதிக்காரனுக்குப் பதவி தந்தான்’ என்ற பழி வந்துவிடும். நான் ஏன் அவசியமில்லாத இப்பழியை