பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத நிகழ்ச்சிகள் 35 f இச்செய்தி மாணாக்கர் விடுதிக்கும் எட்டியது. ஏழு விடுதிகள் இவர்கட்கு இருந்தன. கிட்டத்தட்ட 2000 பேர் இருந்தனர். வழக்கமாக மாலை 7.30லிருந்து அவர்கள் உணவு கொள்வது வழக்கம். அன்று அவர்கள் மாலை 6-30லிருந்தே கூட்டம் கூட்டமாகக் கூடத் தொடங்கினர். மகளிர் விடுதிக்குக் கட்டில்கட்கு ஏற்பாடு செய்த துணைவேந்தர் தங்களைக் கவனிக்கவில்லையே என்று அடுத்த நாள் வேலை நிறுத்தத்திற்குத் தயார் செய்ய அணிவகுக்கத் தொடங்கினர். இதனை ஒரு பணியாள் துணைவேந்தருக்குத் தெரிவித்தான்; கூட்டம் சுறுசுறுப்பாகக் கூடுகின்றது என்றும் விளக்கினான்; வேலை நிறுத்தத்தின் காரணத்தைக் கூடத் தெரிவித்தான். அப்போது அவர் "ஹ"க்கர் பிடித்துக் கொண்டிருந்தார்; அது முடியும் சமயம் நானும் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். சாதாரணமாக இல்லத்தில் இருக்கும் போது ஒரு தளர்த்தியான வெள்ளைக் கால் சட்டை யுடனும் (Pyiama), ஜிப்பாவுடன்தான் காணப்படுவார். உலாவும்போது பயன்படும் மெல்லிய பிரம்புடனும் செருப்புடனும் கிளம்பிவிட்டார். மிஸ்டர் ரெட்டியார், நீங்களும் என்னுடன் வாருங்கள்’’ என்று சொல்வித் கொண்டே வேகமாக நடந்தார். இவருடைய திருமாளி கைக்கு எதிரில்தான் சுமார் 100 மீட்டர் தொலைவில் ஏழு மாணவர் விடுதிகளும் ஒன்றன்பின் ஒன்றாக அமைந் திருந்தன. துணைவேந்தர் தங்களை நோக்கி வருகின்றார் என்ற செய்தி எப்படியோ மாணாக்கர்களை எட்டி விட்டது. துணைவேந்தரிடம் தெரிவித்த அதே பணியாள்தான் இச் செய்தியையும் கொண்டு போயிருப்பான் என்று நான் நினைத்துக் கொண்டேன். எங்களைக் கண்டதும் ஒரு விடுதிக்கு முன்னிருந்த அகன்ற நாற்கோண முற்றத்திற்கு முன் (Qnadiangle) கும்பலாகக் கூடி விட்டனர். துணை வேந்தர், சிறிதும் அலட்டிக் கொள்ளாது அக்கூட்டத்தி