பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3战多 நினைவுக் குமிழிகள்-4 னுள்ளே புகுந்தார். அமைதியாக நானும் அவரைத் தொடர்ந்து சென்றேன். எங்களைச் சுற்றி வட்டமாகக் கூடினர் மாணாக்கர்கள். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் பொறுப்பிலுள்ளவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுவது வழக்கம். நிர்வாகத்திற்கு அம்மொழிதான் மிலாவகமாக இருக்கும். அதிகார தோரணையும் அதில் தொனிக்கும. துணைவேந்தர் அப்போது ஆங்கிலத்தில் பேசவில்லை. சில வளர்ந்த மாணாக்கர்களின் தோளின் மீது கையைப் போட்டுக் கொண்டு தெலுங்கில் பேசினார். தெலுங்கிலும் உருதுவிலும்மிக நன்றாகப்பேசுவர்.தாய் மொழியில்பேசும் போதே அன்பு கசிந்து நிற்கும். தமிழர்கள் தமிழை'அமிழ்தம்: என்பதுபோல தெலுங்கர்கள் தெலுங்கைத் தேன்’ என்பார் கள். பாரதியாரும் சுந்தரத் தெலுங்கு என்று போற்றி னாரல்லவா? தங்களுக்கும் கட்டில் வேண்டும்; ஒவ்வொரு, அறையிலும் மின் விசிறிகள் சுழல வேண்டும்; இந்தக் எங்கள்கோரிக்கை நிறைவேறாவிடில் வேலை நிறுத்தத்தில், இறங்குவதாக முடிவாகக் கூறினர். துணைவேந்தர் அன்பொழுகப் பேசினார் : நீங்கள் கட்டில் வேண்டு. மேன்று கேட்டீர்களா? மகளிர் மெல்லியலார்: பயந்தாங்: கொள்ளிகள். சிறிய நிகழ்ச்சிகட்கெல்லாம் மருண்டு விடு. வார்கள். அவர்கள் கேட்டார்கள், இரக்கப்பட்டு உடனே ஏற்பாடு செய்தேன். நீங்கள் கேட்கவில்லையே. நீங்கள் ஆண் சிங்கங்கள்; எதையும் சமாளித்துக் கொள்ளும் வீரம். மிக்கவர்கள். பல்கலைக் கழகம் மாணாக்கர்கள் படிக்க, கல்வி கற்க, ஆராய்ச்சி செய்ய ஏற்பட்டதேயன்றி துணை வேந்தரும். பதிவாளரும், அவருடைய சகாக்களும் பேராசிரியர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்று. வோரும் சம்மளம் வாங்கிப் பிழைப்பதற்காக அல்ல என் பதை நீங்கள் உணர்தல் வேண்டும். மாணாக்கர்கள் இல்லை என்றால் இத்தனை பேர்கட்கும் இங்கு வேலை இல்லை, உங்கள் உடல் நலன், மன நலன், படிப்பதற் கேற்ற நல்ல சூழ்நிலை, இவற்றுற்கெனவே விடுதிகள் ஏற்.