பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறக்க முடியாத நிகழ்ச்சிகள் 353 பட்டன. இவ்விடுதிகள் நன்னிலையில் அமைந்தால்தானே நீங்கள் நன்கு படிக்க முடியும்? நாளையே உங்கட்குக் கட்டில்கள் செய்யக் கட்டளை அனுப்பி விடுகின்றேன். மின்விசிறிகள் வேண்டுமென்று வற்புறுத்தாதீர்கள். இங்கு நல்ல காற்று வருகின்றது. தற்சமயம் தேவை இல்லை எனக் கருதுகின்றேன். தவிர நீங்களும் விசிறியைத் தேவை யானபோது போட்டுக் கொள்ளவும், தேவையில்லாத போது நிறுத்தவும் செய்து கொள்ள வேண்டும். வீணாக மின்விசிறிகள் சுழன்று கொண்டிருந்தால் மின் கட்டணம் அதிகமாகும். இங்குப் படிப்பவர்கள் எல்லோருமே செல்வர் கள் அல்லர்; ஏழை வீட்டுப் பிள்ளைகளும் படிக்கின்றனர்: விடுதிச் செலவு குறைந்தால்தான் அனைவருக்கும் நலன் நீங்கள் பொறுப்புணர்ந்தவர்கள். தயவு செய்து மின்விசிதி வேண்டுமென்று வற்புறுத்தாதீர்கள். கட்டில்களுக்கு நாளையே ஏற்பாடு செய்து விடுவேன். எந்தத் தேவையாக் இருந்தாலும் உங்களில் யாராவது இரண்டு அல்லது மூன்று பேர் என்னை வந்து கண்டு சொல்லுங்கள். தயவு செய்து வேலை நிறுத்தத்தில், இப்பொழுதல்ல, எப்பொழுதுமே இறங்க வேண்டா. இந்தச் செயல் சூழ்நிலையின் அமைதியை (Morale)க் கெடுத்து விடும். பல்கலைக் கழகத் தின் பெருமை உங்கள் பெருமை; அதன் நற்பெயர் உங்கள் நற்பெயர். நல்லதும் கெட்டதும் உங்கள் கையில் தான் உள்ளன. நன்றாகப் படியுங்கள்' என்று உருக்கமான அறிவுரை கூறினார். மாணாக்கர்களும் சிந்தனையற்ற யற்ற தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து அமைதி யாக உணவுக்குச் சென்றனர். துணைவேந்தரும் நானும் அமைதியாகத் திரும்பினோம். அடுத்த நாள் துணைக் காப்பாளர்களையும் (Debuty Wardens) தங்கிப் பயிற்சி யளிப்போர்களையும் (Resident tutors) கூட்டி விடுதியின் அமைதி கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். தி-23